முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#nutrition
முருங்கை கீரை
முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  1. 1 கட்டுமுருங்கை கீரை
  2. 5 கப்அரிசி கலணி தண்ணீர் -
  3. 1 கப்நறுக்கிய வெங்காயம் -
  4. 1 கப்தேங்காய் பூ -
  5. 2 தேக்கரண்டிகீரை பொடி -
  6. தேவைக்கு ஏற்பஉப்பு
  7. 1 மேஜைக்கரண்டிமாசித்தூள் -
  8. கீரை பொடி செய்முறை
  9. 100 கிராம்காய்ந்த வத்தல் -
  10. 25 கிராம்கொத்தமல்லி -
  11. 25 கிராம்நச்சீரகம் -
  12. 25 கிராம்சோம்பு -
  13. எல்லாவற்றையும் வறுத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அரிசி கலணி தண்ணீர் முதல் 2 தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அத்துடன் நன்றாக கழுவிய ஆய்ந்து வைத்த முருங்கை கீரை, உப்பு, தேங்காய் பூ 1 கப், நறுக்கிய வெங்காயம் 1 கப் ஆகியவற்றை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.

  2. 2

    10 நிமிடம் மிதமான சூட்டில்
    கொதித்ததும், கீரை பொடி 2 தேக்கரண்டி மற்றும் மாசித்தூள் 1 மேஜைக்கரண்டி சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.முருங்கை கீரை சூப் தயார்.

  3. 3

    இது தான் எங்கள் ஊரில் முருங்கை கீரை சூப் செய்யும் பாரம்பரிய முறை. பெரும்பாலும் இதை சோறு, மற்றும் கருவாட்டு குழம்புடன் வைத்து சாப்பிடுவது வழக்கம். கற்பிணி பெண்களுக்கு சூப்பாகவே அருந்த செய்வார்கள். நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து மிகுந்தது என்பதால் எல்லா வயதினருக்கும் ஏற்றது இந்த முருங்கை கீரை சூப்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
அன்று

Similar Recipes