முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)

#birthday4
சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.
முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4
சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.
முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
முருங்கை கீரையை நன்றாக கழுவி,நிழலில் காய வைக்க வேண்டும்.3நாட்களில் காய்ந்து விடும்.
- 3
வெறும் வாணலியை அடுப்பில் வைத்து,தீயை சிம்மில் வைத்து முருங்கை கீரையை போட்டு,நொறுங்கும் அளவுக்கு வறுத்து தனியே வைக்க வேண்டும்.
- 4
அதே வாணலியில்,உளுந்து சேர்த்து,சிவக்க வறுத்து, வேறு தட்டில் வைக்கவும்.
- 5
இதே போல்,எள், கடலை பருப்பு,மிளகு இவற்றையும் தனித்தனியாக வறுத்து, உளுந்துடன் சேர்த்து வைக்கவும்.
- 6
மேலும்,ஈரமில்லாத கறிவேப்பிலை சேர்த்து நொறுங்கும் அளவும், புளியின் ஈரம் போகும் அளவும் வறுக்கவும்.
- 7
பின் 1சொட்டு எண்ணெய் ஊற்றி வரமிளகாய் போட்டு வறுத்து தனியே வைக்கவும்.
- 8
பின்,அடுப்பை அணைத்து கல் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுத்துக்வும்.
- 9
வறுத்த அனைத்தையும் ஆற வைத்து,முதலில் மிக்ஸி ஜாரில் முருங்கை கீரையை சேர்த்து அரைக்கவும்.
- 10
பின் அதனுடன் வறுத்த மற்ற பொருட்கள் அன்னைத்தம் சேர்த்து,தேவைக்கேற்ப கொரகொரப்பாக அல்லது மையாக அரைக்கவும்.
குறிப்பு: வறுத்தவற்றை அரைக்கும் போது, நம் சுவைக்கேற்ப புளியின் அளவை கூட்டிக் குறைக்கவும்.
- 11
இந்த பொடியுடன்,நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து கலந்து இட்லி,தோசை மற்றும் சுடு சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
- 12
அவ்வளவுதான். மிகவும்,சுவையான மணமான,சத்தான,முருங்கை கீரை பருப்பு பொடி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது. Renukabala -
வல்லாரை கீரை பொடி சாதம்(vallarai keerai podi sadam recipe in tamil)
#LBவளரும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் ஆரோக்கியமானது கீரையை அப்படியே சமைத்து கொடுத்தா சில குழந்தைகள் சாப்பிட மாட்டாங்க வல்லாரை கீரை வாசம் நிறைய பேர்க்கு பிடிக்காது ஆனா இந்த மாதிரி பொடி செய்து கொடுக்கும் போது அதிக வல்லாரை கீரை வாசம் வராது டேஸ்ட் செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
பருப்பு கீரை கூட்டு(paruppu keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம். அம்மாவிர்க்கு மிகவும் பிடித்த கீரை பருப்பு கீரை. சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு. வெங்காயம். பூண்டு சேர்த்துக்கொள்வதில்லை Lakshmi Sridharan Ph D -
முருங்கைப் பொடி (Murunkai podi recipe in tamil)
#jan2முருங்கை இலையில் அதிகமான சத்துகள் உள்ளன முக்கியமாக இரும்பு சத்து உள்ளது.இதனை நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ரத்த சோகை பிரச்சினை தீரும். தலை முடி உதிர்தல் குறையும் முடி வளர்ச்சி பெறும். தினமும் கீரையை சுத்தம் செய்து உணவில் எடுத்துக்கொள்வது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில் ஒரு தடவை இந்தப் பொடியை தயார் செய்து தினமும் சாதத்துடன் சாப்பிடலாம். கீரை சாதம் சாப்பிட்ட சத்து கிடைக்கும்.கூடவே பருப்பு மற்றும் ரசம் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமும் கிடைக்கும். Asma Parveen -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
-
தினை & முருங்கை கீரை இட்லி பொடி
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள். Shanthi -
பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)
என் தோட்டத்தில் பருப்பு கீரை ஏராளம். சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் . #jan2 Lakshmi Sridharan Ph D -
-
முடக்கத்தான் கீரை பருப்பு பொடி.(balloon vine dal powder recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. மூட்டு வலி, உடல் வலி போன்ற நோய்களுக்கு அரும் மருந்தாகவும் இருக்கிறது.... முடக்கத்தான் கீரை வைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட நான் செய்த அருமையான பருப்பொடியும் செமுறையும்.... Nalini Shankar -
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
பாவக்காய் பருப்பு பொடி(pavakkai paruppu podi recipe in tamil)
#birthday4 - பருப்பு பொடிபெரும்பாலானவர்கள் பாவக்காய் கசப்ப்பாக இருக்கிறதினால் சாப்பிட மறுத்து விடுவார்கள் ஆனால் பாவக்காயின் மருத்துவ குணம் நம் உடல் ஆரோகியத்துக்கு மிக உகந்தது, சாப்பாட்டில் சேர்த்து கொள்வது அவச் யமானதும் ..அதின் கசப்பு தன்மை தெரியாமல் பருப்பு பொடியாக செய்து தினம் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டு வரலாம் ....எங்க வீட்டில் நான் செய்யும் பாவக்காய் பருப்பு பொடி... Nalini Shankar -
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
கீரை சாதம்(keerai sadam recipe in tamil)
#HJகீரையில் இரும்பு,சுண்ணாம்பு சத்து என பல வகையான சத்துக்களை கொண்டுள்ளது. தினமும்,கீரைகளை சாதம் /சூப்/குழம்பு என உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
#nutritionமுருங்கை கீரைமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. Haseena Ackiyl -
-
ஆந்திரா பருப்பு பொடி (Andhra paruppu podi recipe in tamil)
புரொட்டீன் பருப்பு பொடி என்றே சொல்லலாம்.குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வச்சு கொடுத்தால் காலியாக வரும். #ap Azhagammai Ramanathan -
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட்