முருங்கை கீரை ரசம்

முருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் .
முருங்கை கீரை ரசம்
முருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் .
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை கீரை 1 கை பிடி கழுவி சுத்தம் செய்து வெறும் கடாயில் பிரட்டி நிறம் மாறியவுடன் தண்ணீர் சிறிது சேர்த்து வேகவிடவும்.
- 2
தக்காளி 1,மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்,சீரகம் 1 டீஸ்பூன்,மிளகு 1 டீஸ்பூன்,பூண்டு 5 பல் எடுத்து வைத்து,மிக்ஸியில் மஞ்சள் தூள் தவிர்த்து,அனைத்தையும் ஜாரில் அரைத்து வைக்கவும்.
- 3
வெந்த முருங்கை கீரையில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு புளி தண்ணீர் 1 கப் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
கொதித்ததில்,கடாயில் ஆயில் ஊற்றி கடுகு 1/2 டீஸ்பூன்,சீரகம் 1 டீஸ்பூன்,பெருங்காயம் 1 சிட்டிகை கருவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
- 5
கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.சுவையான முருங்கை கீரை ரசம் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil -
-
முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
-
-
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது. Renukabala -
முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும். Sharmi Jena Vimal -
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N -
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
-
மசாலா வேர்க்கடலை
#Book#Lockdown2லாக்டவுன் காலங்களில் காய்கறி ,பழம் கடைகள் மளிகை கடைகள் மட்டுமே திறந்து இருக்கின்றன .நொறுக்குத் தீனி கடைகள் மூடி உள்ளன. ஆகையால் மளிகை கடையில் வேர்க்கடலை 250 கிராம் வாங்கி மசாலா வேர்க்கடலை செய்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும் மகிழ்ச்சி . Shyamala Senthil -
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
அரைக் கீரை பூண்டு கடையல்
magazine6#Nutrition அரைக் கீரையில் அனைத்து ஊட்டச் சத்தும் அடங்கியுள்ளது இரும்புச் சத்து மணிச்சத்து வைட்டமின் ஏ சி கால்சியம் புரதம் நார்ச்சத்து உள்ளது பிரசவம் அடைந்த பெண்களுக்கு மிகவும் நல்லது மருத்துவத்திற்கு சிறந்த மருந்தாக உதவும் புண்டு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது Sasipriya ragounadin -
தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும். Manjula Sivakumar -
வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)
வெந்தய கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.#arusuvai 2 Renukabala -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
முருங்கை கீரை வடை
#vadai+payasam #combo5முருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நோய் நிவாரணிபருப்புகள், அரிசி, சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. வடை, பாயசம் எல்லா பண்டிகைகளிலும் உண்டு Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை தோசை
இதில் புரதச்சத்து உள்ளது. பல தமுருங்கைக் கீரை உண்பதால் உடல்சூடு மந்தம், மூர்ச்சை, கண் நோய் ஆகிய குறைபாடுகள் வராமல் தடுக்கலாம். வயிற்றுப் புண்களை ஆற்றும் சக்தி முருங்கைக் கீரையில் உள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உடலின் சர்க்கரை அளவை சமநிலைப் படுத்தவும், கர்ப்பிணி, வளர் இளம்பெண்களை ரத்த சோகையிலிருந்து விடுவிக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது. இது தவிர, ஆஸ்துமா, மார்புச்சளி, வறட்டு இருமல், தலைவலி, மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்து வியாதிகளுக்கும் மிகச்சிறந்த இயற்கை நிவாரணியாக செயல்படுகிறது.#nutrient1#book Vimala christy -
பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள். Sowmya Sundar -
-
-
-
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha
More Recipes
கமெண்ட்