பச்சரிசி  திடீர் தோசை / நீர் தோசை (Raw rice instant dosa recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

பச்சரிசி  திடீர் தோசை / நீர் தோசை (Raw rice instant dosa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. 1கப் பச்சரிசி
  2. 1/2 மூடி தேங்காய்
  3. தேவையான அளவுஉப்பு
  4. தேவையான அளவுதண்ணீர்
  5. தேவைக்கேற்பஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசியை நன்கு கழுவி மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  2. 2

    பின்னர் தேங்காயை துருவி அல்லது துண்டுகள் போட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    அத்துடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.

  4. 4

    அரைத்த மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து,தோசை தவாவை சூடு செய்து மாவையெடுத்து தோசை தவாவின் ஓரத்தில் சுற்றிலும் ஊற்றவும். அதன் மேல் சுற்றிலும் எண்ணெய் தூவவும்.

  5. 5

    ஒரு நிமிடம் விட்டு திருப்பிப் போட்டு எடுத்தால் சுவையான மிகவும் மெல்லிசான, மிருதுவான நீர் தோசை தயார்.

  6. 6

    இந்த தோசையை தேங்காய் வேர்கடலை சட்னி,தக்காளி மற்றும் கார சட்னியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

  7. 7

    தோசை மாவு தண்ணீர் போல் இருக்க வேண்டும். அப்போது தான் தோசை மிருதுவாக இருக்கும். அதனால் தான் இந்த தோசைக்கு நீர் தோசை என்றும், அரைத்த உடனே செய்வதால் திடீர் தோசை என்றும் சொல்கிறோம்.

  8. 8

    பச்சரிசி,தேங்காய் வைத்து அரைத்த உடனே தோசை செய்யலாம். சுலபமான, சுவையான இந்த தோசையை அனைவரும் செய்து சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Top Search in

Similar Recipes