தேவையான பொருட்கள்

  1. பாசிபயிறு - 1 கப்
  2. இஞ்சி - 1 சிறுதுண்டு
  3. பச்சைமிளகாய் - 4
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - தேவையான அளவு
  6. கடுகு - 1/2 ஸ்பூன்
  7. கருவேப்பிலை - சிறிது
  8. சீனி - 1/2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிபயிறை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.

  2. 2

    காலையில் இஞ்சி, 2 பச்சைமிளகாய் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பின் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

  4. 4

    கேக் பாத்திரத்தில் எண்ணெய் தடவி பாசிபயிறு கலவையை அதில் சேர்க்கவும்.

  5. 5

    அடுப்பில் உள்ள பாத்திரத்தில் சிறிய ஸ்டான்ட் வைத்து கேக் பாத்திரத்தை மூடி உள்ளே வைக்கவும்.

  6. 6

    பின் பாத்திரத்தை நன்கு மூடி 20- 25 நிமிடங்கள் வேக விடவும்.

  7. 7

    நன்கு ஆறியபின் தட்டில் வைத்து வில்லைகளாக வெட்டி கொள்ளவும்.

  8. 8

    பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சீனி, 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து கொதித்த பின் இறக்கி ஆற வைத்து வில்லைகளின் மேல் பரவலாக ஊற்றி வைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட்

Madhu Mj
Madhu Mj @cook_17282663
செயல்முறை போட்டோ ஷாப் பண்ணுங்க ப்ளீஸ்

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes