எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
15 நபர்
  1. 1 கப் கடலைமாவு
  2. 100 கிராம் கேரட் துருவல்
  3. 2 கப் சர்க்கரை
  4. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  5. 1/4 ஸ்பூன் ஜாதிக்காய் பொடி
  6. 1 சிட்டிகை பச்சை கற்பூரம்
  7. 100 மில்லி நெய்
  8. தேவையானஅளவு எண்ணெய்
  9. 100 கிராம் முந்திரி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்

  2. 2

    கேரட் துருவலை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்

  3. 3

    பின் சர்க்கரை தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த கேரட் விழுது சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  4. 4

    ஒரு கம்பி பதம் வந்ததும் ஏலத்தூள் ஜாதிக்காய் பொடி பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து இறக்கவும்

  5. 5

    நெய் விட்டு முந்திரி ஐ சின்ன சின்னதாய் உடைத்து பின் வறுத்து எடுக்கவும்

  6. 6

    கடலைமாவை தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்

  7. 7

    பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் ஜர்னியில் மாவை ஊற்றவும்

  8. 8

    ஊற்றிய மாவை தேய்க்க கூடாது அப்படியே முத்து முத்தாக பூந்தி விழ வேண்டும் ஜார்னியை தட்டினால் பூந்தி நன்கு விழுங்கும்

  9. 9

    சிவக்க விடாமல் மெத்தென்று இருக்கும் போது எடுத்து எண்ணெய் வடிகட்டி வைக்கவும்

  10. 10

    பின் சர்க்கரை பாகில் போட்டு பரவலாக நெய் விட்டு வறுத்த முந்திரி சேர்த்து நன்கு அவ்வப்போது கிளறி இரண்டு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை ஊறவிடவும்

  11. 11

    பின் நன்கு அழுத்தி பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

  12. 12

    புது சுவையுடன் நன்றாக இருக்கும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes