வாழைக்காய் வறுவல்

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2வாழைக்காய்
  2. 4 அல்லிபூண்டு
  3. 2 டீஸ்பூன்சோம்பு
  4. 1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி
  5. 1 1/2 டீஸ்பூன்மிளகாய் பொடி
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைக்காயை தோல் நீக்கிய பின் வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

  2. 2

    பூண்டு, சோம்பு இரண்டையும் அரைத்து வெட்டி வைத்த வாழைக்காயில் சேர்த்து அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.

  3. 3

    தோசைக்கல் அடுப்பில் வைத்து வறுப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வாழைக்காயை ஒவ்வொன்றாக எண்ணெயில் அடுக்கி வேக விடவும்.

  4. 4

    ஒரு பக்கம் வெந்ததும் உடைந்து விடாமல் மறித்து போடவும்.

  5. 5

    மறு பக்கமும் வெந்து பொன்னிறமாகும் போது எடுக்கவும்.

  6. 6

    சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.

  7. 7

    சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes