சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், வரமல்லி, வர மிளகாய், கருவேப்பிலை தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
வாழைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 3
வறுத்த மசாலாக்களை நன்றாக ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும்.
- 4
கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்து கடலைப்பருப்பு கருவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
- 5
பிறகு அதில் சிறிய துண்டுகளாக நறுக்கிய வாழைக்காயை சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கி தண்ணீர் தெளித்து மஞ்சள் தூள் உப்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
- 6
வாழைக்காய் வெந்ததும் அதில் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 7
இப்பொழுது சுவையான வாழைக்காய் வறுவல் தயார். இது தயிர் சாதத்தோடு தொட்டுக்கொள்ள மிகவும் அருமையாக இருக்கும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14947241






கமெண்ட்