புடலங்காய் முட்டை பொரியல்

Navas Banu
Navas Banu @cook_17950579
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோபுடலங்காய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2முட்டை
  4. 1/2 கப்தேங்காய் துருவல்
  5. 1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி
  6. 3பச்சை மிளகாய்
  7. 1 டீஸ்பூன்ஜீரகம்
  8. 3சின்ன வெங்காயம்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 1/2 டீஸ்பூன்கடுகு
  11. தேவையான அளவுஎண்ணெய்
  12. கொஞ்சம்கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    புடலங்காயை தோல் சீவி கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், மஞ்சள் பொடி, ஜீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.

  4. 4

    கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்க்கவும்.கடுகு பொட்டியதும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

  5. 5

    இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய புடலங்காயை சேர்த்து வதக்கவும்.

  7. 7

    தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பத்து நிமிடம் ஸிம்மில் வேக வைக்கவும்.

  8. 8

    புடலங்காய் வெந்ததும் அரைத்த மஸாலாவை இதனுடன் சேர்த்து, இரண்டு முட்டையையும் இதனுடன் உடைத்து ஊற்றி தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  9. 9

    தண்ணீர் வற்றி ட்ரை ஆகி உதிரி உதிரியாக வரும் போது இறக்கவும்.

  10. 10

    சுவையான புடலங்காய் முட்டை பொரியல் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes