புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25நிமிடங்கள்
2பேர்
  1. 1புடலங்காய்
  2. 10சின்ன வெங்காயம்
  3. அரைக்க:
  4. 2ஸ்பூன்( தேங்காய் துருவல்
  5. 1மிளகாய்,காரத்திற்கேற்ப
  6. 1/2ஸ்பூன் சீரகம்)
  7. தேவையானஅளவு உப்பு
  8. தாளிக்க:
  9. 2ஸ்பூன் கடலைஎண்ணெய்
  10. 1/2ஸ்பூன் கடுகு
  11. 1வரமிளகாய்
  12. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

25நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.

    புடலங்காய் தோல் சீவி,கழுவி,உள்ளே உள்ள விதைகளை நீக்கி,தேவையான பக்குவகுத்தில் வெட்டிக் கொள்ளவும்.

    மிக்ஸி ஜாரில்,தேங்காய்,சீரகம், மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு, வரமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வதங்கியதும்,நறுக்கிய புடலங்காய் மற்றும் உப்பு சேர்த்து 1 நிமிடத்திற்கு கிளறி விடவும்.

  4. 4

    பின்,100ml அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.அடிக்கடி கிளறவும்.

  5. 5

    10 நிமிடங்களில் வெந்துவிடும்.வெந்து தண்ணீர் வற்றியதும், அரைத்த விழுதை சேர்த்து கிளறவும்.

  6. 6

    2நிமிடங்கள் விட்டு உப்பு சரி பார்த்து இறக்கவும்.

  7. 7

    அவ்வளவுதான்.சுவையான புடலங்காய் பொரியல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes