Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)

Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409

Suji rasmalai (Bengali special). ரவை ரசமலாய் (Ravai rasamalai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்.
5 servings
  1. 2 கப்பால்
  2. 2 டீஸ்பூன்நெய்
  3. 1/4கப்சர்க்கரை
  4. 1/4கப்ரவை
  5. 2 டேபிள் ஸ்பூன்பால் பவுடர்
  6. 1/3 கப்தண்ணீர்
  7. ஏலக்காய்த்தூள் சிறிது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்.
  1. 1

    முதலில் ஒரு கடாயில் பால் -ஒரு கப், நெய் -ஒரு டீஸ்பூன் மற்றும் சர்க்கரை- கால் கப் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பால் நன்றாக கொதித்து சுண்டியதும் அதில் படிப்படியாக ரவையை சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக கிளறவும்.

  2. 2

    ரவை நன்றாக கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் நிலையில் எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி நன்றாக ஆறவிடவும். ஆறியபின் அதனை நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்பு கைகளில் நெய் தடவிக்கொண்டு ரவை கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து படத்தில் உள்ளபடி தட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    வேறொரு கடாயில் பால்- 1கப், பால் பவுடர் -2 டேபிள்ஸ்பூன், மற்றும் சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாக காய்ச்சவும். அதில் உருட்டிய உருண்டைகளை சேர்த்து இரண்டு புறமும் திருப்பி போட்டு நன்றாக வேக விடவும்.

  4. 4

    நன்றாக கலந்துவிட்டு சிறிது நேரம் மூடி போட்டு மிதமான தீயில் வேகவிடவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

  5. 5

    நன்றாக வெந்தவுடன் அடுப்பை அனைத்து விட்டு அதில் துருவிய டிரைநட்ஸ் சேர்த்து அலங்கரிக்கவும். சுவையான ரவை ரசமலாய் தயார் இதை குளிர வைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanas Home Cooking
Sanas Home Cooking @cook_18123409
அன்று

Similar Recipes