கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க.

கோதுமை ரவை பாயாசம் (Kothumai ravai payasam recipe in tamil)

#pooja பூஜை என்றாலே பாயாசம் தான் நினைவுக்கு வரும்.அந்த வகையில் சத்தான கோதுமை ரவை பாயாசம் செய்யலாம் வாங்க.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 நபர்
  1. 1 கப்கோதுமை ரவை
  2. 1 1/2 கப்வெல்லம்
  3. 6முந்திரி
  4. 5 டீஸ்பூன்நெய்
  5. 1 கப் பால் -(காய்ச்சியது)
  6. 1/2 டீஸ்பூன்ஏலக்காய் தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாணலியில் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து கொள்ளவும்.அதே நெய்யில் 1 கப் கோதுமை ரவை எடுத்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும்.

  2. 2

    வறுத்த ரவை குக்கர் சேர்த்து 3 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.

  3. 3

    1 பாத்திரத்தில் 1 1/2 கப் வெல்லம் எடுத்து 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ள வேண்டும்.

  4. 4

    வெல்லத்தை வாணலியில் வடிகட்டி வெந்த கோதுமை ரவை சேர்க்கவும்.

  5. 5

    இதனுடன் 1 கப் பால் சேர்க்கவும்.(ஏற்கனவே கொதித்து ஆற வைத்த பால்),பிறகு சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

  6. 6

    2 நிமிடம் கொதித்தவுடன் வறுத்த முந்திரியை சேர்க்கலாம்.

  7. 7

    நவராத்திரி அல்லது சரஸ்வதி பூஜைக்கு பிரசாதம் தயார்!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes