தாகி பெய்கான் - ஒடியா ரெசிபி (thagi peikon recipe in Tamil)

Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685

தாகி பெய்கான் - ஒடியா ரெசிபி (thagi peikon recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 250 கிராம் கத்தரிக்காய்
  2. 200 கிராம் தயிர்
  3. 2 பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கியது
  4. 2காய்ந்த மிளகாய் வற்றல்
  5. 1டீஸ்பூன் பூட்டானா (சீரகம், கடுகு, வெந்தயம், கருஞ்சீரகம்)
  6. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  7. ஒரு கொத்துகறிவேப்பிலை
  8. ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
  9. 1/2டீஸ்பூன் சீரகம் தூள்
  10. 2டீஸ்பூன் சர்க்கரை
  11. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. தேவையானஅளவு உப்பு
  13. 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கத்தரிக்காய், 3/4டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

  3. 3

    தயிர், உப்பு மற்றும் பெருங்காயத்தூள நன்கு  கலந்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

  4. 4

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், நறுக்கிய கத்தரிக்காயை பொன்னிறமாக வறுத்து  எடுக்கவும்.

  5. 5

    பின்பு வேறொரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, புட்டானா, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  6. 6

    இப்போது வறுத்த கத்தரிக்காயைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

  7. 7

    பின்னர் உப்பு, 1/4டீஸ்பூன் மிளகாய் தூள், 1/4டீஸ்பூன் சீரகத்தூள், பெருங்காயத்தூள்  மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.

  8. 8

    கடைசியாக கலக்கி வைத்துள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  9. 9

    கொத்தமல்லி இலைகளைத் தூவி சூடான சப்பாத்தி, சாதத்துடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fathima Beevi Hussain
Fathima Beevi Hussain @cook_20253685
அன்று

Similar Recipes