சாக்லேட் கோட்டட் செர்ரிஸ் (chocolate coated cherries recipe in tamil)

Mangala Gowri
Mangala Gowri @cook_18828587
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு பேக்கட் செர்ரி பழங்கள் (10-12 எண்ணிக்கை)
  2. 1வெள்ளை நிற சாக்லேட் (பெர்லிஸ், வான் அவுட்டன் அல்லது கிடைக்கும் ப்ராண்ட்) 100 -150 கிராம் (குக்கிங் சாக்லேட் பயன்படுத்தக்கூடாது)
  3. விரும்பினால் ஆயில் பேஸ் ஃபுட் கலர்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சிறிது தண்ணீரை கொதிக்க விடவும். சாக்லேட்டை மற்றொரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். உங்களுடைய சாக்லேட் காய்ன்ஸ் வடிவத்தில் இருந்தால் நலம். பார் சாக்லேட் என்றால் சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். (இது கட்டாயம்) பிறகு சாக்லேட் இருக்கும் பாத்திரத்தை கொதித்த நீரிருக்கும் பாத்திரத்தினுள் வைக்கவும். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் சாக்லேட்டில் ஒரு துளி நீர் கூட படக்கூடாது. கரண்டியால் நன்கு கலக்கவும். மெல்ல உருக ஆரம்பித்து பின்னர் முழுமையாக கரைந்து விடும். கட்டியில்லாமல் கலந்து விடவும்.

  3. 3

    செர்ரி பழங்களை நன்கு கழுவி கிச்சன் டவல் கொண்டு துடைத்து வைக்கவும். பழங்கள் கொஞ்சமும் நீரின்றி இருக்க வேண்டியது அவசியம். காம்போடு இருப்பதும் முக்கியம்.

  4. 4

    நீர் முற்றிலும் காய்ந்த பின்னர் உருகிய சாக்லேட்டில் முக்கி ஒரு டிஸ்ஸு பேப்பர் மேல் வைக்கவும். சாக்லேட் நன்கு கோட் ஆக வேண்டியது முக்கியம். தேவைப்பட்டால் ப்ரிட்ஜில் வைத்தும் பரிமாறலாம். குழந்தைகள் பிறந்தநாள் போன்ற விஷேஷங்களுக்கு ஏற்ற ஸ்பெஷல் சாக்லேட் இது.

  5. 5

    பின் குறிப்பு: வெள்ளை நிற சாக்லேட்டில் விருப்பப்பட்டால் ஆயில் பேஸ் ஃபுட் கலர் சேர்த்தும் செய்யலாம். ஒரு பக்கம் மட்டும் கலர், இரண்டு பக்கத்துக்கும் இரு வேறு கலர் என கற்பனைக்கேற்றவாறு செய்யலாம். படத்தில் ஒரு பக்கம் வெள்ளையும் ஒரு பக்கம் பிங்க் கலரும் கோட் ஆகியிருப்பதை கவனியுங்கள்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mangala Gowri
Mangala Gowri @cook_18828587
அன்று

Similar Recipes