முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)

#KR
முருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது.
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KR
முருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முருங்கை கீரையை கழுவி,நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
20நிமிடங்கள் ஊறவைத்த, துவரம்பருப்பை குக்கரில் சேர்த்து,1/4ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2டம்ளர் தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கவும்.
பருப்பு நன்றாக மசிந்து இருக்க வேண்டும்.
- 3
வாணலியில் 3ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து வெடித்ததும்,சீரகம் சேர்த்து பொரிந்ததும், பின் பூண்டு மற்றும் நறுக்கிய வெங்காயம் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கியதும்,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
பின், மஞ்சள் தூள் குழம்பு மிளகாய்த்தூள், உப்பு மறறும் புளி சேர்த்து கலந்து விடவும்.
புளிகரைசல் சேர்க்கக் கூடாது.இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போக கொதிக்க விடவும்.
- 6
இனி நறுக்கி வைத்து முருங்கை கீரையை சேர்த்து கிளறி,கீரை வேகம் அளவு பருப்புத் தண்ணீர் சேர்த்து,கொழுந்து கீரை என்பதால் 10 நிமிடங்கள் வரை வதக்கினால் போதும்.
- 7
வதங்கியதும்,மசித்த பருப்பு மற்றும் மல்லித்தழை சேர்த்து கிளறவும். நன்றாக ஒரு கொதி வந்ததும் ஸ்டவ்வை ஆஃப் பண்ணிவிட்டு ஆறவைக்கவும்.
- 8
ஆறியதும்,கடைவதற்கு வசதியான பாத்திரத்திற்கு மாற்றி நன்றாக கடையவும். குறைந்தது 5 நிமிடங்கள் ஆகும்.
- 9
அல்லது
மிக்சி ஜாருக்கும் மாற்றி பல்ஸ் மூடி 2,3 சுற்றுகள் விட்டு எடுக்கவும். இவ்வாறு செய்யும்போது குழந்தைகள் கீரை என்பதே தெரியாமல், சாப்பிடுவர்.
- 10
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது சேர்க்கவும்.மீதி இருக்கும் பருப்புத் தண்ணீர் மற்றும் தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்
- 11
கீரை நன்றாக அரைந்து இருப்பதால் பிடிக்காதவர்கள் கூட சாப்பிட முடியும்.
- 12
அவ்வளவுதான். சுவையான,சத்தான, முருங்கை கீரை குழம்பு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது. Renukabala -
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keeraiகீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்... Nalini Shankar -
-
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in
#magazine2இது என் அம்மா சொல்லிக் கொடுத்தது."குழம்பு கூட்டுதல்" என்பது தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளி கரைசல் மற்றும் மசாலா கலந்து விடுவார்கள். இதற்குதான் 'குழம்பு கூட்டுதல்' என்று பெயர்.கூட்டிய குழம்பபை கொதிக்க வைத்து, கொதித்த பிறகு,அந்தந்த குழம்பு வகைகளுக்கு ஏற்ற மாதிரி காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
முருங்கை கீரை பொரித்த குழம்பு (murungaikeerai poritha kulambu recipe in tamil)
#fitwithcookpad#bookஎண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கிய முருங்கைக் கீரை சத்து மாறாமல் எப்படி சமைப்பது என்று சமையல் குறிப்பு இந்த ரெசிபியை செய்கிறேன். முருங்கைக்கீரை முடி கொட்டுதல் அயன் சத்து போன்றவற்றை உடனடியாக நிவர்த்தி செய்யும். இந்த முருங்கைக்கீரையை பச்சை மாறாமல் சமைத்தால் மட்டுமே அதன் சத்து நமக்கு முழுமையாக கிடைக்கும். அரைப் பதம் வெந்து இருக்கும்பொழுது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்திற்கு மாற்றினால்தான் அந்த சூட்டிலேயே பதமாக வெந்து இருக்கும்.அடுப்பிலேயே இருக்கும்பொழுது நன்றாக வேக வேண்டும் என்றால் அதன் நிறம் மாறி சத்துக்கள் குறைந்து விடும்.மேலும் முருங்கைக்கீரை மட்டுமன்றி எந்த ஒரு கீரையையும் மூடி வைத்து வேக வைக்க கூடாது. Santhi Chowthri -
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்... Nalini Shankar -
முருங்கை கீரை பொரியல்🥦🥦(Murunkai keerai poriyal recipe in tamil)
வெங்காயம் அதிக#nutrie ironnt3மா சேர்த்தால் சுவையாக இருக்கும். 🌰🌰 iron Sharmi Jena Vimal -
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
-
-
-
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N -
-
முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம். Jayanthi Jayaraman -
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)
#jan2பொன்னாங்கண்ணிக் கீரை கண் பார்வைக்கு மிகவும் நல்லது.கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாள் பொன்னாங்கண்ணி கீரை எடுத்துக்கொண்டால் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு இப்போது இருந்தே பொன்னாங்கண்ணிக் கீரையை கொடுத்து வந்தால் கண் பார்வை குறைபாடு வராது. Meena Ramesh -
-
-
-
-
-
-
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்