முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)

T.Sudha
T.Sudha @sudhathaya

முருங்கை கீரை சாம்பார்(murungai keerai sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
நான்கு பேர்
  1. முருங்கை கீரை
  2. 100கிராம்துவரம் பருப்பு
  3. 2வெங்காயம்
  4. 2தக்காளி
  5. 10பூண்டு
  6. சிறிதளவுபெருங்காயம்
  7. இரண்டு ஸ்பூன்மிளகாய்த்தூள்
  8. சிறிதளவுபுளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முருங்கைக் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இக் கீரை இளசாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    துவரம்பருப்புடன் சிறிதளவு மஞ்சள்தூள் பெருங்காயத்தூள் பூண்டு ஆகியவற்றை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெங்காயம் தக்காளி காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வதக்க வேண்டும் பின் மிளகாய் தூள் போட்டு நன்றாக வதக்கி சிறிதளவு புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்

  4. 4

    பின் வேக வைத்துள்ள துவரம் பருப்பை நன்றாக குழைத்து அதில் ஊற்றி தேவையான உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்

  5. 5

    நன்றாக கொதித்தவுடன் முருங்கைக்கீரையை அதில் போட்டு இரண்டு கொதி வந்தவுடன் இறக்கி விட வேண்டும் அதிகமாக கொதிக்க வைக்கக் கூடாது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
T.Sudha
T.Sudha @sudhathaya
அன்று

Similar Recipes