மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)

சமையல் திட்டத்துடன் இணைக்க
மணதக்காளி கீரை பொரியல்
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.
#முட்டை
#book
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்த நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இது கீரையில் உள்ள பூச்சி மற்றும் கிருமிகளை அழிக்கும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- 3
கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
நறுக்கிய கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.
- 5
கீரையில் உள்ள நீர் வற்றியதும் 2 முட்டையை உடைத்து ஊற்றவும்.முட்டை நன்கு வெந்ததும் கீரையுடன் சேர்த்து பிரட்டவும்.
- 6
சுவையான மற்றும் சத்தான மணத்தக்காளி கீரை முட்டை பொரியல் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
மணதக்காளி கீரை பொரியல்
அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#book Meenakshi Maheswaran -
மணத்தக்காளி கீரை பொரியல்🌿🌿🌿
#GA4 #week15( herbal) மணத்தக்காளி இலைச் சாற்றை35மிலி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டு வந்தால் சிறுநீரை பெருக்கும்; உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம் ,உடல் வெப்பம் ஆகியவற்றை குணப்படுத்தும்.மணத்தக்காளி கீரை வாய்ப்புண்களை குணமாக்கும்அருமருந்து. Nithyavijay -
மணத்தக்காளி கீரை பொரியல்
#GA4சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. Madhura Sathish -
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)
மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டுகீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடம்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் உணவில் கட்டாயமாக காலந்து கொள்ள வேண்டும். மணத்தக்காளி கீரை எங்கள் தோட்டத்தில் தானகவே வளரும் . இது தக்காளி குடும்பத்தை சேர்ந்தது. (பார்க்காதவர்களுக்காக புகைப்படம் இணைத்திருக்கிறேன். பால் சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வருகிறது என்று குழந்தைகள் சொல்லும் காலம் இது) இயற்க்கை மருத்துவத்தில் மணத்தக்காளிக்கு ஒரு தனி இடம். இலை, காய், பழம், வத்தல் அனைத்தையும் நான் சமையலில் சேர்ப்பேன். வேகவைத்த பயத்தம் பருப்போடு. அரைத்த தேங்காய், மிளகு, மிளகாய், சீரகம், உளுந்து, இஞ்சி, கடலை பருப்பு கூழொடு கீரை சேர்த்து ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. கீரை சிறிது கசக்கும். கசப்பு அரு சுவையில் ஒன்று. அதனால் சமையலில் கசப்பான பொருட்களை சேர்க்க வேண்டும் எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.#goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
-
மணத்தக்காளி இலை ரசம் (Manathakkali leaves rasam)
மணத்தக்காளி இலைகள் மிகவும் மருத்துவகுணம் வாய்ந்தது. இந்தக்கீரை பொரியல் செய்தாலும் சுவை அதிகம். வாய், வயிற்றுபுண் எல்லாவற்றையும் சரி செய்யக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளது.#sambarrasam Renukabala -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
மணத்தக்காளி கீரை தண்ணி சாறு (Manathakkali keerai thanni saaru recipe in tamil)
#Nutrient3மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது.வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் உள்ளன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது. Shyamala Senthil -
மணத்தக்காளி கீரை கூட்டு (Manathakkali keerai kootu recipe in tamil)
#jan2#week2வாய்ப்புண் வயிற்றுப்புண் அல்சர் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு மணத்தக்காளிக்கீரை வாரத்தில் ஒரு தடவை அது நம் உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய மருத்துவ குணமுள்ள கீரை Vijayalakshmi Velayutham -
முள்ளங்கி கீரை பொரியல்
#momமுள்ளங்கி கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. நல்ல மருத்துவகுணம் கொண்டது. நம்மில் பலர், முள்ளங்கியை மட்டும் கறி செய்துவிட்டு கீரையை தூக்கிப் போட்டு விடுகிறோம். சத்தான இந்தக்கீரையில் இரும்பு, சுண்ணாம்பு, புரோட்டின் சத்துக்கள், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், வைட்டமின் ஏபிசி முதலியவையும் அதிகமாக உள்ளது. இனிமேல் யாரும் முள்ளங்கி கீரையை தூக்கிப் போடாமல் சமைத்து சுவைக்கவே இந்த பதிவு. Renukabala -
-
மணத்தக்காளி கீரை தயிர் பச்சடி (Manathakkali keerai thayir pachadi recipe in tamil)
#arusuvai6 Shyamala Senthil -
செட்டிநாடு மணத்தக்காளி கீரை சூப்
#refresh2வாய்ப்புண், குடல் புண், அல்சர் உள்ளவங்க வாரத்திற்கு மூன்று முறை மணத்தக்காளி சூப் குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.Deepa nadimuthu
-
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
-
முட்டை, வல்லாரை கீரை பொரியல் (Egg, vallaarai keerai poriyal recipe in tamil)
முட்டை எல்லோரும் அடிக்கடி சாப்பிடும் உணவு. அத்துடன் ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரையை சேர்த்து பொரியல் வடிவில் முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#made3 Renukabala -
-
-
மணத்தக்காளி கீரை பருப்பு மசியல் (Manathakkali keerai paruppu masiyal recipe in tamil)
#jan2விட்டமின் டி மற்றும் இ நிறைந்துள்ள மணத்தக்காளி கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். Nalini Shanmugam -
மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி. Gayathri Sudhakar -
வல்லாரை கீரை பொரியல்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சத்துள்ள ஞாபக சக்தியை அதிகரிக்கக்கூடிய வல்லாரை கீரை பொரியல் Devi Bala Chandrasekar -
-
-
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
முட்டை கேரட் பொரியல் (Muttai carrot poriyal recipe in tamil)
#nutrient1 #book. புரதச்சத்து நிறைந்துள்ள 'முட்டை' முடி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கிறது. தலைமுடி வளர்ச்சிக்கு 70% கேரட்டின் புரதம் தேவைப்படுகிறது. அசைவம் சாப்பிடாதவர்கள் கூட, முட்டை சாப்பிடுவது வழக்கம். காரணம், இறைச்சியில் நிகரான கொழுப்பு, புரதச் சத்தினை முட்டை அளிக்கிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களாலும், உடனடி புரதம், கொழுப்புக்கான நிவாரணியாக முட்டை பயன்படுத்தப்படுகிறது. Dhanisha Uthayaraj -
-
முட்டை பொரியல் (எக் பூர்ஜி) (Muttai poriyal recipe in tamil)
#worldeggchallengeஎங்கள் வீட்டில் வெரைட்டி ரைஸ் மற்றும் பிடிக்காத உணவு வகைகள் இருந்தாலும் இந்த எக் பூர்ஜி சைடிஸ்ஸாக இருந்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார். Hemakathir@Iniyaa's Kitchen -
முடக்கத்தான் கீரை கூட்டு
டிரக் லோட் முடக்கத்தான் கீரை என் தோட்டத்தில். நாட்டு மருத்துவத்தில் இதற்க்கு தனி இடம். வேர் , இலை , காய் எல்லாமே நலம் தரும் மூட்டு வலிக்கு, பயத்தம் பருப்பு, கீரை, தேங்காய் பால் சேர்ந்த சத்தான சுவையான கூட்டு. உணவுடன் கீரையை எப்பொழுதும் சேர்க்கவேண்டும் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
வெங்காயத்தாள் மூக்கிரட்டை கீரை முட்டை பொறியல்(spring onion mookkirattai keerai poriyal recipe)
வீட்டில் விளைந்த கீரையை வைத்து என் மகனுக்காக சமைத்தேன் . Sujitha SHANMU
கமெண்ட்