மணதக்காளி கீரை பொரியல்

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.
#book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
  1. 1கப் மணதக்காளி கீரை
  2. 2தேக்கரண்டி நல்லெண்ணெய்
  3. 1 தேக்கரண்டி கடுகு
  4. 1/2 தேக்கரண்டி உளுந்து
  5. 1 தேக்கரண்டி கடலைபருப்பு
  6. 1பச்சை மிளகாய்
  7. பெருங்காயம்
  8. 1கப் தேங்காய் துருவல்
  9. 10 சின்ன வெங்காயம்
  10. 1கொத்து கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கீரையை நன்றாக சுத்தம் செய்து,மஞ்சள் தூள் சேர்த்த நீரில் 10நிமிடம் வைக்கவும். இது கீரையில் உள்ள கிருமிகளை அழிக்கும்.

  2. 2

    வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கவும். கடுகு,உளுந்து,கடலை பருப்பு சேர்த்து எண்ணெயில் நன்றாக வறுக்கவும்.

  3. 3

    நறுக்கிய மிளகாய்,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பெருங்காயம்,சிட்டிகை மஞ்சள்,உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    நறுக்கிய மண தக்காளி கீரை சேர்த்து வதக்கவும். தண்ணீர் சேர்க்க தேவை இல்லை.மூடி போட்டு சமைக்க வேண்டாம்.

  6. 6

    கீரையில் உள்ள நீர் வற்றியவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

  7. 7

    சுவையான மண தக்காளி கீரை பொரியல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes