#book 14 புதினா முட்டை மசால்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. முட்டை 6
  2. பெரிய வெங்காயம்-2
  3. சின்ன வெங்காயம் 6
  4. தக்காளி-2
  5. புதினா ஒரு கைப்பிடி அளவு
  6. கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
  7. வரமிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. கொத்து மல்லி தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. மசால் தூள் அரை டேபிள்ஸ்பூன்
  10. பட்டை கிராம்பு ஏலக்காய் வறுத்து அரைத்த பொடி கால் டேபிள்ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் கால் டேபிள்ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு
  13. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம், தக்காளி மற்றும் புதினா கொத்துமல்லி இலைகளை சேர்த்து வதக்கவும் இதில் வரமிளகாய்த்தூள், கொத்தமல்லித் தூள் மசாலா தூள்,பட்டை கிராம்புத்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி ஆறியவுடன் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் அடுப்பை மிதமான தீயில் வைத்து வணக்கிக் கொண்டே இருக்கவும்.மசால் வெந்து என்னை பிரியும் வரை வதக்கவும்.

  3. 3

    மசால் வாசம் நீங்கியவுடன் அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி நன்கு கலந்து முட்டை வேகும் வரை கிளறவும் முட்டை வெந்தவுடன் அடுப்பை அணைத்து பரிமாறவும.

  4. 4

    இப்பொழுது அருமையான சுவையான புதினா முட்டை மசால் தயார்.😋😋😋

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes