பச்சை பயறு சுசீயம்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#lockdown1
இந்த ஊரடங்கு நாட்களில் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. இன்று நான் பச்சை பயறு பயன்படுத்தி சுசீயம் செய்து கொடுத்தேன். என் குழந்தைக்கு மிகவும் பிடித்திருந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 minutes
3 பரிமாறுவது
  1. பச்சை பயறு 1 கப்
  2. வெல்லம் 3/4 கப்
  3. தேங்காய் துருவல் 2 மேசைக்கரண்டி
  4. உப்பு ஒரு சிட்டிகை
  5. ஏலக்காய் தூள் சிறிதளவு
  6. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  7. நெய் 2 ஸ்பூன்
  8. அரிசி மாவு 1/2 கப்
  9. மைதா மாவு 2 மேசைக்கரண்டி
  10. எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

35 minutes
  1. 1

    முதலில் பச்சை பயறு தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கவும். இவற்றை ஓரளவு மசித்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் வெல்லம் பொடியாக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஏலக்காய் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து கரைத்து கொள்ளவும்.வானலில் நெய் ஊற்றி தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி வெல்ல கரைசலை வடிகட்டி இதில் ஊற்றி கலந்து விடவும்.

  3. 3

    இதில் வேக வைத்து எடுத்த பச்சை பயறு சேர்த்து நன்கு கலந்து விட்டு தண்ணீர் வற்றி சுருண்டு வரும் வரை கிளறி விடவும்.பிறகு சூடு தணிந்ததும் கையால் சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு பவுலில் அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு தோசை மாவு பதத்திற்கு கட்டி இல்லாமல் கரைத்து வைத்து கொள்ளவும்.வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளை இந்த மாவு மிக்ஸில் முக்கி எண்ணெயில் போடவும்.

  5. 5

    எண்ணெய்யில் ஒவ்வொன்றாக முக்கி போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். அரிசி, மைதா மாவு மிக்ஸிற்கு பதிலாக இட்லி மாவு பயன்படுத்தியும் செய்யலாம். சுவையான சத்தான பச்சை பயறு சுசீயம் தயார். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes