கறி வடகம் / உளுந்து வடகம்

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

உளுந்து இதயத்திற்கு மிகவும் நல்லது .இதை வறுத்து பொடி செய்து சூடு சாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம் . வடகம் குழம்பு வைத்தும் சாப்பிடலாம் . தினமும் சாம்பாரில் இதை சேர்த்து தாளிக்கும்போது மிகவும் மணமாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 250 கிராம் உளுத்தம் பருப்பு
  2. 850 கிராம் சின்ன வெங்காயம்/ ஒரு பெரிய படி
  3. 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
  4. 1/4 டேபிள் ஸ்பூன் துவரம் வெந்தயம்
  5. 4 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  6. 1 பிடி கருவேப்பிலை
  7. 2 குண்டு பூண்டு
  8. உப்பு தேவையான அளவு
  9. 1 டேபிள் ஸ்பூன் சீரகம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அனைத்து பருப்பு வகைகளையும் தனித்தனியே ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    சின்ன வெங்காயத்தை மற்றும் துவரம் பருப்பை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    கிரைண்டரில் ஊறவைத்த உளுந்து, பாசிப்பருப்பு மற்றும் வெந்தியத்தை, தண்ணீர் சேர்க்காமல்,அரைத்த சின்ன வெங்காய விழுதை சிறிது சிறிதாக சேர்த்து உளுந்தை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    உளுந்து புசுபுசுவென்று வந்தவுடன், அதில் தேவைக்கேற்ப உப்பு,கருவேப்பிலை, பூண்டு இவை அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் கிரைண்டரில் சுற்றி,மாவை உடனே வழித்து எடுத்து விடவும். கிள்ளி வைப்பதற்கு முன் சீரகத்தை கலந்து கொள்ளவும்.

  5. 5

    வலித்த மாவை உடனே எடுத்து கிள்ளி வைக்க வேண்டும்.இல்லையெனில் உளுந்து நுரை அடங்கி விடும் வடகம் நன்றாக வராது. இந்த அளவு வடகத்திற்கு மூன்று பேர் சேர்ந்து கடகட என கிள்ளி வைக்கவும்.

  6. 6

    ஒரே நாளில் இந்த வடகம் காய்ந்துவிடும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes