உளுந்து வெங்காய வடை

#Np3
விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது.
உளுந்து வெங்காய வடை
#Np3
விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு தம்ளர் பூண்டு உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு ஸ்பூன் பச்சரிசி சேர்த்து நன்கு கழுவிக் கொள்ளவும். மிதக்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒன்னேகால் அல்லது ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும். இதற்கிடையில் ஒரு பெரிய வெங்காயம் 2 பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு மற்றும் சீரகத்தை நுணுகி கொள்ளவும்.கறிவேப்பிலை கொத்தமல்லியை பொடியாக அரிந்து கொள்ளவும். நான் இஞ்சி சேர்க்கவில்லை தங்களுக்கு விருப்பம் என்றால் அரை ஸ்பூன் இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.
- 2
உளுந்து ஊறிய பிறகு ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் கால் டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும். பிறகு இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை பச்சை மிளகாய் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பிறகு அடுப்பில் ஒரு கனமான வாணலியை வைத்து வடை சுடுவதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய வைக்கவும். மாவை தண்ணீரில் கையை நனைத்து விட்டுகாயில் எடுத்து உருட்டி தட்டி மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இருபுறமும் திருப்பி போட்டு சிவக்க எடுக்கவும். இதை காலை நேரம் என்றால் சாம்பார் செய்த அதில் ஊற வைத்து சாம்பார் வடை சாப்பிடலாம். மாலை நேரத்தில் பொட்டுக்கடலை சட்னி செய்து தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
Similar Recipes
-
சாம்பார் வடை
#everyday1காலையில் டிபனுடன் சாம்பார் வடை சாப்பிடுவது பெரும்பாலோனோருக்கு மிகவும் விருப்பமாகும். அதுவும் இட்லி சாம்பார் வடை மற்றும் பொங்கல் சாம்பார் வடை இவற்றிற்கு ரசிகர்கள் அதிகம். அவர்களின் லிஸ்டில் நானும் உண்டு. ஆமாம் சாம்பார் வடை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்று ஹோட்டல் ஸ்டைலில் சாம்பார் வடை செய்வது பற்றி இந்த ரெசிபியில் சொல்லியுள்ளேன் Meena Ramesh -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆனியன் ஊத்தாப்பம் தோசை
#everyday3கம்பு மற்றும் எல்லா வகை பருப்புகளையும் கலந்து செய்த கம்பு அடை தோசை. கம்பு சேர்ப்பதால் வெயிலுக்கு நல்லது. எல்லா வகை பருப்புகளும் சேர்ப்பதால் புரதச்சத்து அதிகம் கிடைக்கும். கார மிதமாக சேர்த்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாராளமாக கொடுக்கலாம். Meena Ramesh -
கறி வடகம் / உளுந்து வடகம்
உளுந்து இதயத்திற்கு மிகவும் நல்லது .இதை வறுத்து பொடி செய்து சூடு சாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிடலாம் . வடகம் குழம்பு வைத்தும் சாப்பிடலாம் . தினமும் சாம்பாரில் இதை சேர்த்து தாளிக்கும்போது மிகவும் மணமாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)
#poojaவெங்காயம் சேர்க்காத உளுந்து போண்டா. நாங்கள் சரஸ்வதி பூஜை மற்றும் திருவாதிரை பூஜைக்கு செய்வது. இதனுடன் இனிப்பு கச்சாயம் சுடுவோம். அதன் ரெசிபி கொடுத்துள்ளேன்.உளுந்து போண்டா வில் வெங்காயம் சேர்க்காமல் கொத்தமல்லித்தழை கறிவேப்பிலை சீரகம் மிளகு மட்டும் சேர்த்து உளுந்து மாவில் போடப்படும் போண்டா. Meena Ramesh -
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
-
கோதுமை ரவை சேமியா உப்மா (Gothumai Ravai Semiya Upma Recipe in Tamil)
#இரவு நேர உணவுகள் Sanas Home Cooking -
வெஜிடபிள் பனியாரம்
#kids3குழந்தைகளுக்கு பனியாரம் என்றால் மிகவும் பிடிக்கும்.அதுவும் காய்கறிகள் சேர்த்து செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.இதில் குழந்தைகளுக்கு என்பதால் மிளகாய் சேர்க்காமல் செய்துள்ளேன்.அதற்கு பதிலாக கண் பார்வைக்கு நல்லதாக குடமிளகாய், கேரட் போன்றவை சேர்த்து செய்துள்ளேன். Meena Ramesh -
-
-
Steamed diet rava vegetable uppuma recipe in tamil
#ed2 # ravaரவா உப்புமா என்றாலே எண்ணெய் அதிகம் சேர்த்து செய்ய வேண்டும். அப்போதுதான் உப்புமா ருசியாக இருக்கும். ஆனால் வயது ஆக ஆக அதிக எண்ணெய் சேர்த்து உப்புமா சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும்.மேலும் வயிற்றுக்கு ஒத்துக்கொள்வது இல்லை. அதனால் ரவா உப்புமாவை ஆவியில் வேகவைத்து காய்கறிகள் சேர்த்து செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் என்று யோசித்து செய்தேன். மிக மிக அருமையாக ருசி அமைந்தது. சிறு குழந்தைகளுக்கு என்றால் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து முந்திரிப்பருப்பு சேர்த்து செய்து கொடுக்கலாம். தேங்காய் துருவல் கூட சேர்க்கலாம்.வயதானவர்கள் என்றால் நான் செய்துள்ள முறைப்படி செய்து கொடுக்கலாம். முந்திரிப்பருப்பை அலங்காரத்திற்காக நான் இன்று சேர்த்தேன். வாருங்கள் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். Meena Ramesh -
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
மோர் வடை
Lock-down recipe., வெளியில் கடைகளில் எதுவும் வாங்கி சாப்பிட முடியாத நேரம்.ஆகையால் வீட்டிலேயே சுவையான மோர் வடை செய்தேன். சுவையாக இருந்தது செய்துபாருங்கள். Soundari Rathinavel -
தவல வடை
பருப்புகள், அரிசி, தேங்காய் சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது. பூண்டு சேர்க்கவில்லை. ஸ்ரீதர்க்கு பூண்டு வாசனை பிடிக்காது. பூண்டு விரும்பினால் அரைக்கும் பொது பூண்டு சேர்த்து அறைக்க. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. #Np3 Lakshmi Sridharan Ph D -
140.உளுந்து வடை
உளுந்து வடை ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி மற்றும் காலை உணவிற்கு இது வழங்கப்படுகிறது. காலை உணவு மெனுவில் இட்லி வடை ஒரு பொதுவான உருப்படி. Meenakshy Ramachandran -
ஆனியன் உளுந்து வடை / Ulunthu Vadai Recipe in tamil
#magazine1 (80 வது ரெசிபி)உளுந்து வடைக்கு சிறிது பச்சரிசியும் ஊற வைத்து செய்தால் வடை மொறுமொறுப்பாகவும் ஸாப்ட்டாகவும் வரும்.ஆன் தி ஸ்பாட் செய்த வடை. ஈவ்னிங் சுடசுட சாப்பிட ஆப்ட்டானது.வெங்காயம் எந்த அளவு போடுகின்றோமோ அந்த அளவிற்கு வடை சூப்பராக இருக்கும். Jegadhambal N -
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
உளுந்து மாவு கஞ்சி
உளுந்த மாவு கஞ்சியை இன்று செய்து பார்த்தேன். என் குழந்தைகள் மிகவும் விரும்பி குடித்தனர். Manju Jaiganesh -
Veg fish tawa fry
#Everyday4மீன் சுவைக்கு இனையான சேனைக்கிழங்கு தவா மொறு மொறு பிரை. மிகவும் சிறந்த சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
பச்சரிசி சீரக சாதம் (Pacharisi seeraga satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் , பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய மற்றும் உடலுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவு சீரக சாதம். குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்றது Vaishu Aadhira -
More Recipes
கமெண்ட்