சிறு கீரை பால் கடையல்

#immunity #book
பொதுவாக எல்லாக் கீரைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரைகள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது சிறு கீரையில் வர கொத்தமல்லி, சீரகம்,பூண்டு பல் வெங்காயம் மற்றும் பால் சேர்த்து கடைந்து உள்ளதால் நோய்எதிர்ப்பு சக்தியும் நம் உடலுக்கு கிடைக்கும். சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கீரையை ஆய்ந்து நன்கு அலசி கொள்ளவும். 15 சிறிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக அரிந்து கொள்ளவும். 6 பல் பூண்டையும் அரிந்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் அரிந்த வெங்காயம்,பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு கழுவி சுத்தம் செய்த கீரையை சேர்த்து வதக்கவும். எல்லாவற்றையும் நன்கு திருப்பி விட்டு வதக்கிய பின் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்க்கவும். சமையல் சோடா சேர்ப்பதால் கீரை நிறம் மாறாது மற்றும் மிகக் குறைவான தண்ணீரில் நன்கு வெந்து விடும். சமையல் சோடா சேர்ப்பது உங்கள் விருப்பம்.
- 3
கொஞ்சமாக கீரையில் தண்ணீர் தெளித்து வேகவிடவும். கீரை வெந்த பின் அதில் உப்பு சேர்த்து மத்து கொண்டு சூடாக இருக்கும் பொழுதே கடைந்து விடவும். இல்லையென்றால் ஆறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும்.
- 4
தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு, அதில் ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வரகொத்தமல்லி, 3 கிள்ளிய வரமிளகாய் சேர்த்து சிவக்க விடவும். இந்த தாளிப்புகளை கடைந்த கீரையில் சேர்த்து அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் நன்கு சூடுபடுத்தி கலந்து விடவும். பிறகு அடுப்பை நிறுத்தி விடவும்.
- 5
கடைசியாக காய்ச்சி ஆற வைத்த, பால் அரை டம்ளர் கீரையில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.. இந்த சிறு கீரை பால் கடைசல், சாதத்துடன் சேர்த்து சாப்பிட, சுவையாக இருக்கும். மேலும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்


குடமிளகாய் சாதம்😋


கீரை மசியல் (Keerai masiyal recipe in tamil)


பாலாக்கீரை பாசிப்பருப்பு பால் கூட்டு🥗🍶


பொன்னாங்கண்ணி கீரை குழம்பு (Ponnaankanni keerai kulambu recipe in tamil)


சிறு கீரை தண்டு சூப்


பருப்பு கீரை


இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪


செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)


தக்காளி பூண்டு ரசம்


சிறு கீரை தேங்காய்பால் கூட்டு (Greens with coconut milk gravy)


அரைக்கீரை கடையல்


மணத்தக்காளிக் கீரை துவையல்


40.கீரை கறி


பொன்னாங்கண்ணி கீரை கூட்டு


கடப்பா சட்னி


கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)


31.வாழைப்பூ கறி


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)


கீரை பொரியல்


தண்டு கீரை கடையல்


முருங்கை கீரை கோதுமை அடை


கீரை சாதம்


கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்


அரைக்கீரை மசியல்


பாரம்பரிய முளைக்கீரை கடையல்


மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு(keerai koottu recipe in tamil)


பூண்டு கறி(garlic curry recipe in tamil)


முருங்கைக்கீரை பொரியல்

கமெண்ட்