பாலாக்கீரை பாசிப்பருப்பு பால் கூட்டு🥗🍶

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#nutrient1 #book
பாலாகீரையில் பல நன்மைகள் உண்டு. புரத சத்து அதிகம் நிறைந்தது.ரத்தம் விருத்தியடையும். இந்தக் கீரையுடன் வேப்பிலை, மஞ்சள் தூள், ஓமம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் பெருவயிறு குறையும். போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்திற்கு நல்லது.
குழந்தை பெற்றவர்கள் உட்கொண்டால் பால் அதிகம் சுரக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும். மெக்னீசியம், ஜிங்க், காப்பர், விட்டமின் கே அதிகம் உள்ளதால் எலும்புகள், பற்கள் உறுதியாக இருக்கும். இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடுவதால் மாரடைப்பு ரத்த குழாய் அடைப்பு வராமல் தடுக்கும். சிறு பருப்புடன் கூட்டாக சமைத்து சாப்பிடலாம்.
பாலில் கால்சியம் சத்து( 12./.)அதிகம் உள்ளது. புரோட்டின் சத்தும் 3.4 கிராம் உள்ளது. விட்டமின் பி, விட்டமின் b 16, மெக்னீசியம் பொட்டாசியம், சோடியம் ,காலன்மின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. பல சத்துக்கள் நிறைந்த பாலா கீரை, புரதம் நிறைந்த பாசிப்பருப்பு மற்றும் கால்சியம் நிறைந்த பால் சேர்த்து செய்த கூட்டு இது. உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. ஒரு கட்டு பாலக்கீரை
  2. அரை கப் பாசிப்பருப்பு
  3. ஒரு பெரிய வெங்காயம் பொடியாக அரிந்தது
  4. 3 பல் பூண்டு பொடியாக அரிந்தது
  5. அரை டம்ளர் பால்
  6. ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல்
  7. தாளிக்க
  8. ஒரு ஸ்பூன் எண்ணெய்
  9. அரை ஸ்பூன் கடுகு
  10. அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  11. 3 வரமிளகாய் கிள்ளியது

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு கட்டு பாலக் கீரையை கழுவி சுத்தம் செய்து பொடியாக அரிந்து கொள்ளவும். அரை கப் பாசிப்பயிறு தண்ணீரில் கழுவி தனியாக ஒரு பாத்திரத்தில் வேக வைத்துக் கொள்ளவும். குழைய வேக விட வேண்டாம்.

  2. 2

    ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, மற்றும் கிள்ளிய மூன்று வரமிளகாய் சேர்த்து சிவந்தவுடன் பொடியாக அரிந்த 3 பல் பூண்டு மற்றும் பொடியாக அரிந்த ஒரு பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இப்போது பொடியாக அரிந்த கீரையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு வேக வைத்த பருப்பை அதில் சேர்க்கவும். பருப்பில் உள்ள தண்ணீரே கீரை வேக போதுமானது. தேவை என்றால் கொஞ்சமாக நீர் சேர்த்துக் கொள்ளவும். கீரை முக்கால் பதம் வெந்தவுடன் காய்ந்த அரை டம்ளர் பாலை அதில் சேர்க்கவும். ஒரு 2 நிமிடம் கொதிக்க விடவும். கொஞ்சம் நீர் சுண்டியவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கடைசியாக ஒரு ஸ்பூன் தேங்காய் துருவலை அதில் சேர்க்கவும் நன்கு கலந்து விடவும். தேங்காய்த்துருவல் சேர்ப்பது அவரவர் விருப்பம்.

  4. 4

    இப்போது சுவையான, உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய எல்லா சத்துக்களும் நிறைந்த பாலாக்கீரை பால் பருப்பு கூட்டு தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். சப்பாத்திக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes