இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪

#immunity #book
இஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍.
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #book
இஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍.
சமையல் குறிப்புகள்
- 1
10 சின்ன வெங்காயத்தை நீள வாக்கில் அரிந்து கொள்ளவும். இரண்டு முழு பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளவும். 2 இன்ச் நீளமுள்ள இஞ்சியை தோல் நீக்கி பொடிாக நறுக்கிக்கொள்ளவும். புலியை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்தவுடன் ஒரு ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்.அதில் அரிந்த வெங்காயத்தை ஒரு நிமிடம் சேர்த்து வதக்கவும். மீண்டும் அதில் பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளவும். ஒரு 3 நிமிடம் வதங்க விடவும்.
- 3
வெங்காயம், பூண்டு நன்கு வதங்கிய பின் அதில் இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து வேகவிடவும்.
- 4
வேறு ஒரு தனி கடாயில், ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் ரெண்டு ஸ்பூன் வரக்கொத்தமல்லி,ஒரு ஸ்பூன் கடலை பருப்பு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் சீரகம், கால் ஸ்பூன் மிளகு, இரண்டு வர மிளகாய் மற்றும் பொடியாக அறிந்து வைத்த இஞ்சியை சேர்த்து நன்கு சிவக்க வறுக்கவும். இஞ்சி வாசம் வந்தவுடன் 3 ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
பூண்டு வெங்காயம் வெந்தவுடன் கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து ஒரு கொதி விடவும். அரைத்து வைத்த விழுதை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். கடைசியாக ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கவும்.. இப்போது இஞ்சி பூண்டு குழம்பு சாப்பிடுவதற்கு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh -
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
கேரளா ஸ்டைல் கடலைக்கறி💪💪
#nutrient1 #bookகருப்பு மூக்கு கல்லை (chickpeas) புரதச்சத்து செறிந்த பயறு வகை ஆகும். 100 கிராம் கருப்பு மூக்கு கலையில் 19 கிராம் புரோட்டீன் உள்ளது. கொழுப்புசத்து அற்றது. சோடியம்,பொட்டாசியம், நார்ச்சத்து, போன்ற இதர தாதுக்களும் உள்ளது கால்சியம் 10% உள்ளது விட்டமின் A, விட்டமின் டி., விட்டமின் பி6 விட்டமின் சி விட்டமின் காம்ப்ளக்ஸ் கொண்டது.மெக்னீசியம், போன்ற தாதுக்களும் உள்ளன. இதில் இரும்பு சக்தி 34% உள்ளது. ரத்தவிருத்திக்கு நல்லது. டைட்டரி ஃபை பர் 17 கிராம் உள்ளது. இதனால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. சில நாள்பட்ட நோய்களான இதயநோய், புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை தடுக்க உதவுகிறது, உயிரணுக்கள் பெருக முக்கிய பங்கு வகிக்கிறது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து கொண்ட சைவ உணவாகும். கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருளாகும் . விலை மலிவானதும் கூட. கேரளா உணவு வழக்கத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. கேரள மக்கள் இந்த கொண்டைக்கடலை கறியை அவர்களுடைய பாரம்பரிய உணவான அப்பம் மற்றும் குழாய் புட்டு உணவு வகைகளுக்கு தொட்டுக்கொள்ள செய்வார்கள். மிகவும் சத்தான உணவு வகையாகும்.😋 மிகவும் சுவையானதும் ஆகும். Meena Ramesh -
-
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன். Meena Ramesh -
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது. Meena Ramesh -
நாட்டு காய்கறி புளிக் குழம்பு
#bookஇந்த புளிக்குழம்பு எங்கள் பக்கம் விரத சமையல் அன்று செய்யப்படுவதாகும் .மேலும் இதில் நாட்டுக் காய்கறிகள் எதை வேண்டுமானாலும் கலந்து செய்யலாம். வெண்டைக்காய் முக்கியமாக சேர்க்க வேண்டும். இந்த குழம்பிற்கு வெங்காயம், தக்காளி, பூண்டு எதுவும் தேவையில்லை. வெறும் காய்கறிகளை மட்டும் கலந்து செய்யலாம். Meena Ramesh -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
-
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்து குழம்பு#immunity
இந்த நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் மருந்து குழம்பு என் சிறிய மாமியார் எனக்கு கற்றுக்கொடுத்தது . இந்த குழம்பில் உள்ள மருத்துவ பொருட்களால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவது மட்டுமல்லாமல் கர்ப்பப்பை கோளாறுகளை சரிசெய்கிறது . Sree Devi Govindarajan -
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
இஞ்சி எலுமிச்சை. தேனீர்
#எதிர்ப்பு சக்தி உணவு#bookஇப்பொழுது உலகையே புரட்டிப் போட்டு வதைத்துக் கொண்டிருக்கும கோவிட் 19 வைரஸ். நாம் நம்மை பாதுகாக்க எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். கொரானா என்பது மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை பாதித்து உயிரை பறிக்க கூடிய நோய் என்பது அனைவரும் அறிந்ததே எனவே நாம் மூச்சுக்குழல் முதல் நுரையீரல் வரை முதலில் பாதுகாப்பது சால சிறந்தது .அதற்கு இந்த இஞ்சி எலுமிச்சை தேனீர் அற்புதமான அருமருந்தாகும் எனவே இதை அனைவரும் தயாரித்து தினம் ஒரு முறையாவது குடித்து வந்தால் நம்மை நாம் காத்துக் கொள்ளலாம் Santhi Chowthri -
பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)
#Deepavali # kids2இது என் அம்மாவின் தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி ஆகும். என்னம்மா கோதுமை அல்வா மிக அருமையாக செய்வார்கள்.அதேபோல் சீப்பு பணியாரம் பாசி பருப்பு முறுக்கு பயத்தம் உருண்டை பூண்டு முறுக்கு ஓட்டு பக்கோடா போன்றவை தீபாவளிக்கு மிக அருமையாக செய்வார்கள். நான் இப்பொழுதுதான் ஒவ்வொன்றாக கற்றுக்கொண்டு வருகிறேன். இது என்னுடைய குக் பாடிர்க்கான முயற்சி. Meena Ramesh -
மோர் குழம்பு
#lockdown 2 #bookஇந்த ஊரடங்கு நேரத்தில் இன்று என்ன செய்ய என்று யோசித்த போது மோர் நிறைய இருந்த காரணத்தினால் மோர் குழம்பு செய்வது என முடிவு செய்தேன். வெண் பூசணி போட்டு செய்தால் நன்றாக இருக்கும். ஆனால் வீட்டை விட்டு வெளியே போக முடியாத சூழ்நிலை. அதனால் வெறும் மோர் குழம்பு மட்டும் செய்தேன். உருளைக்கிழங்கு இருந்தது. அதை தொட்டு கொள்ள செய்தேன். Meena Ramesh -
சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு Vijayalakshmi Velayutham -
-
குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️ Meena Ramesh -
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
முந்திரி பெப்பர் ஃப்ரை
#pepperமிளகு மருத்துவ குணம் உடையது.முந்திரி பருப்புகளை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.அதனால் குழந்தைகளுக்கு முந்திரியும் மிளகும் சேர்த்து பிரை பண்ணி கொடுத்தீங்கன்னா ரொம்ப நல்லது. Priyamuthumanikam -
-
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali -
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
பூண்டு சட்னி
#golden apron3#அவசர சமையல்#bookபூண்டு மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் இது நம் உடலில் ஏற்படக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பூண்டை பச்சையாக பயன்படுத்தும்போது அதன் மருத்துவ குணம் மாறாமல் இருக்கும் மேலும் வேக வைத்தாலும் புளியுடன் சேர்த்து பூண்டு குழம்பு செய்தால் அதன் மருத்துவ குணம் மிகவும் குறைவாக இருக்கும்நாம் இப்பொழுது இந்த ரெசிபிக்கு பூண்டை பச்சையாக பயன்படுத்துகிறோம். இது சட்டென்று செய்வதற்கும் மிகவும் காரசாரமாக இருக்கும்.இந்த சட்னியை காரத்தை குறைக்க நல்லெண்ணையுடன் சேர்த்து குழைத்து அல்லது கெட்டியான தயிருடன் குழைத்து சாப்பிட்டால் மிகவும் அலாதியான சுவையுடன் இருக்கும் நான்கு இட்லி சாப்பிடுபவர்கள் ஆறு இட்லி சாப்பிடுவார்கள். Santhi Chowthri -
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G
More Recipes
கமெண்ட்