ப்ரொக்கோலி புலவ்

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, கேரட், குடை மிளகாய் நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறிகள். இலவங்கப்பட்டை, பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த புலவ்.
ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய், கேரட் தூண்டுகளை பிளென்ச் செய்தேன். காய்கறிகள் பிளென்ச் செய்த தண்ணீர் வெஜிடபிள் பிராத்(vegetable broth). அதை அரிசி வேகவைக்க உபயோகித்தேன். அரிசியை கொதிக்கும் வெஜிடபிள் பிராத்தில் 10 நிமிடம் ஊறவைத்தேன், கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கிராம்பு, இலவங்கப்பட்டை, மஞ்சள் சேர்த்து, வெங்காயம், பூண்டு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கினேன். பின் வெண்ணை சேர்த்து ஸ்கில்லெட்டில் ஊர வைத்த அரிசியை சேர்த்தேன் அரிசி வெந்த பின் காய்கறிகளை சேர்த்து கிளறினேன். உப்பு சேர்த்து முந்திரியால் அலங்கரித்தேன். சுவை, சத்து, மணம், நோய் தடுக்கும் சக்தியை அதிகரிக்கும் புலவ் தயார். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் தயிரில் கலந்து ராய்தா (பச்சடி) செய்தேன்.#immunity #goldenapron3
ப்ரொக்கோலி புலவ்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, கேரட், குடை மிளகாய் நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறிகள். இலவங்கப்பட்டை, பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த புலவ்.
ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய், கேரட் தூண்டுகளை பிளென்ச் செய்தேன். காய்கறிகள் பிளென்ச் செய்த தண்ணீர் வெஜிடபிள் பிராத்(vegetable broth). அதை அரிசி வேகவைக்க உபயோகித்தேன். அரிசியை கொதிக்கும் வெஜிடபிள் பிராத்தில் 10 நிமிடம் ஊறவைத்தேன், கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கிராம்பு, இலவங்கப்பட்டை, மஞ்சள் சேர்த்து, வெங்காயம், பூண்டு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கினேன். பின் வெண்ணை சேர்த்து ஸ்கில்லெட்டில் ஊர வைத்த அரிசியை சேர்த்தேன் அரிசி வெந்த பின் காய்கறிகளை சேர்த்து கிளறினேன். உப்பு சேர்த்து முந்திரியால் அலங்கரித்தேன். சுவை, சத்து, மணம், நோய் தடுக்கும் சக்தியை அதிகரிக்கும் புலவ் தயார். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் தயிரில் கலந்து ராய்தா (பச்சடி) செய்தேன்.#immunity #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க., சமயல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய். கேரட் மூன்றையும் ப்ளேஞ்ச் செய்க. கொதிக்கும் நீரில் 1 நிமிடம் மூழ்க வைத்து பின், ஐஸ் தண்ணீரில் குளிர வைக்க 5 நிமிடங்கள். நீரை வடித்துவிடுக. ப்ளேஞ்ச் செய்த கொதி நீர் வெஜிடபுள் ஸ்டாக். 2 கப் வெஜிடபுள் ஸ்டாக்கில் அரிசியை ஊறவைக்க.
- 3
மிதமான நெருப்பை உபயோகிக்க. ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் போட்டு தாளிக்க, மஞ்சள் பொடி, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கிளற. கறிவேப்பிலை. புதினா, வெங்காயம் சேர்க்க, வெங்காயம் நன்றாக வதங்கிய பின் (4-5 நிமிடங்கள், பூண்டு சேர்த்து கிளற.ஊற வைத்த அரிசி, வெண்ணை சேர்த்து கிளற.
- 4
1/2 கப் வெஜிடபுள் ஸ்டாக் சேர்க்க. கொதித்த பின், நெருப்பை குறைத்து பாத்திரத்தை மூடி வேகவைக்க-10-15 நிமிடங்கள். அரிசி வெந்த பின், காய்கறிகளை சேர்த்து கிளற 4 நிமிடங்கள். உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க, வறுத்த முந்திரி, கொத்தமல்லி சேர்க்க. புலவ் தயார். ருசி பார்க்க
- 5
பச்சடி செய்ய
தயிருடன் வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்க. சிறிது எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளித்து தயிரோடு சேர்த்து கிளற. கொத்தமல்லி, உப்பு சேர்க்க. பச்சடி தயார், புலவோடு, பச்சடி, வறுவல், அப்பளம் சேர்த்து பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
பச்சை நிற காய்கறிகள் புலவ்
#HHபசுமையான நினைவுகள். பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதர் முதல் முதல் தந்த சிகப்பு ரோஜாக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.பச்சை நிற காய்கறிகள் ப்ரொக்கோலி, ஜூக்கினி, குடைமிளகாய் சேர்ந்த புலவ். நலம் தரும் பொருட்கள் நல்ல முறையில் சமைத்த புலவ் #HH Lakshmi Sridharan Ph D -
வாழைப்பூ பிரியாணி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியாணி தாய்லாந்து ஜெஸ்மீன் அரிசி (Thai Jasmine rice) எனக்கு பிடித்த வாசனையான அரிசி.வாழைப்பூ எனக்கு பிடித்த காய்கறி.வாழைப்பூ துவர்ப்பு ஆரோக்கியதிர்க்கு மிகவும் நல்லது. அறு சுவையில் ஒன்று, இரும்பு சத்து, நார் சத்து அதிகம். நோய் தடுக்கும் சக்தி அதிகம்.#Np1 Lakshmi Sridharan Ph D -
-
மிளகு அரிசி அடை
கார சாராமான சுவையான சத்தான நோய் தடுக்கும் மிளகு அரிசி அடை#pepper Lakshmi Sridharan Ph D -
அவரைக்காய் புலவ்
அவரைக்காயில் வைட்டமின் A, B, E, நார் சத்து, புரதம். இன்னும் பல நலம் தரும் சத்துகளும் உள்ளன. இது பருப்பு குடும்பத்தை சேர்ந்தது.பொரியலும், பொரிச்ச கூட்டும் செய்து அலுத்து விட்டது. அதனால் இன்று அவரைக் அவரைக்காயில் புலவ் செய்தேன். வெண்ணையில் கடுகு, சீரகம் பெருங்காயம் தாளித்த பின், கிராம்பு, லவங்கப்பட்டை. ஏலக்காய் சேரத்து, இஞ்சி, பூண்டு போட்டு, வெங்காயத்தை வதக்கினேன். ஊறவைத்த அரிசியை களைந்து , வடித்து அதில் சேர்த்தேன். அரசி பாதி வெந்த பின் அவரைக்காயை சேர்த்து தண்ணீரும் தேங்காய் பாலும் சேர்த்துக்கொண்டு வேகவைத்தேன். எல்லா பொருட்களும் கலந்து வெந்த பின். அடுப்பிலிருந்து இறக்கினேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். சுவையான சத்தான ருசியான புலவ் தயார்.#book Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
சிகப்பு ரோஜா ரசம்
சிகப்பு ரோஜா, எலுமிச்சை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, லெமன் கிராஸ்–எங்கள் தோட்டத்து பொருட்கள். பூச்சி கொல்லும் மருந்தை உபயோகிப்பதில்லை. இஞ்சி, பூண்டு சேர்த்து செய்தேன். ரோஜபூக்களில் அன்டை ஆக்ஸிடண்ட் (anti oxidant) ஏராளம். சாப்பிடும் உணவு அழகிய நிறம் கொண்டு கண்களுக்கு விருந்தாக இருக்கவேண்டும்.காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஸ்பினாச் கீரை புலவ் (Spicy spinach keerai pulao recipe in tamil)
கீரை புலவ்; டாப்பிங்க் கார்மலைஸ்ட் வெங்காயம், பன்னீர் துண்டுகள் #jan2 #GA4 #methi #pulao Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread
மணம், சுவை, சத்து நிறைந்த கொத்தமல்லி பீட்டா பிரட். #Flavourful #GA4 #ROTI Lakshmi Sridharan Ph D -
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் புடலை
நீராவியில் வேகவைத்த சுவையான ஸ்டவ்ட் புடலை. பிஞ்சு புடலை தேர்ந்தெடுக்க. அப்பொழுதுதான் வெட்டுவது எளிது. மசாலா பில்லிங் –வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கடலை மாவு, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்ந்தது #steam Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி கூட்டு சாதம்(brocoli rice recipe in tamil)
#made4 #broccoliநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறி., பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த கூட்டு, சாததுடன் நெய்யும் கூட்டும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவை Lakshmi Sridharan Ph D -
நலம் தரும் செலரி சூப் (nalam tharum cleary soup in tamil)
சத்தும். சுவையும், புற்று நோயை தடுக்கும் தன்மையும், இரத்த அழுத்தத்தையும், கொழுப்பு (கொலஸ்ட்ரால்) குறைக்கும் தன்மையும் கொண்ட செலரி இந்த சூப்பின் முக்கிய உணவு பொருள். இதனுடன் கூட வெங்காயம், குடை மிளகாய் சேர்த்து வதக்கி, பூண்டு தேங்காய் துண்டுகள் முந்திரி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை முதலியவகளை அறைத்துக் கலந்தேன். புரதத்திற்காக (புரோட்டின்) வேகவைத்த வெள்ளை பீன்சை அறைத்து சேர்த்து நன்றாக கிளறினேன். காய்கள் எல்லாம் வெந்து சூப் கொதித்தவுடன், இறுதியாக தேங்காய் பாலையும் சேர்த்தேன், ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை தூள் சேர்த்து, தேவையான உப்பு போட்டு முந்திரியால் அலங்கரித்தேன். ருசித்துப் பார்த்தேன். சுவையாகவும் மணமாகவும் இருந்தது. #goldenapron3.0 #book Lakshmi Sridharan Ph D -
பஜ்ஜிகள் பலவிதம்
பஜ்ஜிகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்எல்லோரும் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். 3 நலம் தரும் காய்கறிகள், வாழைக்காய், கத்திரிக்காய் வாழைப்பூ,-.அரிசி மாவு, கடலை மாவு, மிளகு, சீரக, தனியா, மிளகாய் பொடிகள், கொத்தமல்லி. கறிவேப்பிலை சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #everyday4 Lakshmi Sridharan Ph D -
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் புலவ் (Brussel sprouts pulao recipe in tamil)
ப்ரசல் ஸ்பரவுட்ஸ் முட்டை கோஸ் தாவர குடும்பத்தை சேர்ந்தது. புற்று நோய் தடுக்கும் சக்தி, விடமின்கள். உலோகசத்துக்கள் நிறைந்தது. சுவையான, சத்தான, நறு மணம் மிகுந்த புலவ். தேங்காய் பால் , வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள், ப்ரசல் ஸ்பரவுட்ஸ், பாஸ்மதி சோறு கலந்த புலவ். சுவைத்துப் பார்த்தேன், ருசியோ ருசி!!! #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா
#pjநான் மிகவும் விரும்பும் பஞ்சாபி உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. சாஃப்ட் mouth watering இது செய்ய பொறுமை தேவை. it is worth it . #pj Lakshmi Sridharan Ph D -
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) பொறிச்ச கூட்டு
முட்டைகோஸ் (cabbage) ப்ரொக்கோலி (broccoli) இரண்டுமே ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தவை. இரண்டிலும் நலம் தரும் தாவர ரசாயன பொருட்கள் (phytochemicals) ஏராளம். முட்டை கோஸில் உள்ள விட்டமின் C,(சக்தி மிகுந்த அன்டை ஆக்ஸிடெண்ட்-antioxident), இதய நோய்களையும், புற்று நோய்களையும் தடுக்கு சக்தி நிறைந்தது). கால்சியம், போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) பயோடின்(Biotin) இன்னும் பல உலோக சத்துக்கள் உள்ளன , ப்ரொக்கோலியில் இருக்கும் லூடின் ( lutein) கண்களுக்கு நல்லது; விட்டமின் K நோய்தடுக்கும் சக்தி கொடுக்கும். பாசிபயிறில் புரதத்தோடு, நார் சத்து, இரும்பு, போட்டாசியம், விட்டமின் B6, ஃபோலேட் (folate) . இந்த கூட்டு செய்வது எளிது. சுவையும், சத்தும், மிக மிக அதிகம். காய்கறிகளை குறைந்த நெருப்பிலதான் வேகவைக்க வேண்டும் அப்பொழுதுதான் அதில் இருக்கும் சத்துக்கள் அழியாது. பருப்புகளை குக்கரில்தான் வேக வைக்க வேண்டும். இந்த கூட்டு நோயற்ற வாழ்வைக் கொடுக்கும்.#nutrient1#book Lakshmi Sridharan Ph D -
உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),
#pjஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)
#kkஎண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான பேட்டீஸ். பீட் ரூட் கூட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்
நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. புரதத்திரக்கு பருப்பு. பூண்டு, இஞ்சி, பல கொடிய வியாதிகளை தடுக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் துவையில் ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #immunity Lakshmi Sridharan Ph D -
பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு
#WA பீன்ஸ், ப்ரொக்கோலி, பாசி பருப்பு சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நார் சத்து, புரதம், folate anti oxidants,இரத்தத்தில் சக்கரை கட்டு படுத்தும் இதயத்திர்க்கு, குடலுக்கு, லிவர்க்கு நல்லது. பெண்கள் நலம்தரும் பொருட்களை உணவில் சேர்த்து தங்கள் உடல் நலத்துடன் குடும்ப நலத்தையும் பாது காக்க வேண்டும். என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு தேங்காய் பால், அறைத்துவிட்ட மசாலா சேர்ந்த கூட்டு ருசியோ ருசி. #WA Lakshmi Sridharan Ph D -
கேரட் லஸ்ஸி
நிறம், சத்து. ருசி, போட்டாசியம், விட்டமின் A, பீட்டா கேரோடின் (beta carotene rich அதனால்தான் இந்த காய்கறிக்கு கேரட் என்று பெயர் ) அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும். புற்று நோய் குறைக்கும் சக்தியும் கொண்டது, நான் கால்ஷியம் சேர்ந்த கொழுப்பு குறைந்த பாலில் தயிர் செய்வதால் இந்த லஸ்ஸி கூட கால்ஷியம் சேர்க்கும்; நன்மை கூடும் . கேரட்டை தோலுரித்து பிளேன்ஞ்ச் பண்ணி துருவினேன். துருவலோடு, இஞ்சி, பச்சை மிளகாய், மோர் சேர்த்து பிளென்டரில் லஸ்ஸி செய்தேன். கூட இலக்காய், அதிமதுரம், ஜாதிக்காய், மிளகு பொடி சேர்த்து சுவையான, சத்தான, ருசியான, லஸ்ஸி செய்தேன். #goldenapron3#nutrient1 Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி இட்லி
முள்ளங்கி சத்து நிறைந்த ஒரு காய்கறி, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் C அதிகம், புற்று நோயை தடுக்கும் சக்தியும், நோய் தடுக்கும் சக்தியும், ஜீரணத்தை அதிகமாக்கும் சக்தியும் கொண்டது. நலம் தரும் முள்ளங்கி இட்லி செய்தேன், புளித்த இட்லி மாவும், முள்ளங்கி துருவலும் சமமாக சேர்த்து, தாளித்து. பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, நீராவியில் வேகவைத்து சுவையான இட்லி செய்தேன். #idli#இட்லி Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்