தூதுவளை  ரசம்

KalaiSelvi G
KalaiSelvi G @K1109

#Immunity
#Book
இந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தூதுவளை  ரசம்

#Immunity
#Book
இந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. ஒரு கைப்பிடி தூதுவளை இலை
  2. ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புலி
  3. ஒரு ஸ்பூன் மிளகு
  4. ஒரு ஸ்பூன் சீரகம்
  5. 7 பல்லுபூண்டி
  6. ஒரு ஸ்பூன் கடுகு
  7. 2 தக்காளி
  8. கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
  9. மூணு ஸ்பூன் நல்லெண்ணெய்
  10. இரண்டு வரமிளகாய்
  11. தேவையானஅளவு உப்பு
  12. சிறிதளவுகறிவேப்பிலை
  13. சிறிதளவுமல்லி இலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் புளியுடன் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைத்து அதை கரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி மிளகு சீரகம் பூண்டு தூதுவளை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    தக்காளியை புளித் தண்ணீருடன் அதன் விதைகளை மட்டும் கரைத்து கொள்ளவும்.

  4. 4

    இப்போது வதக்கிய கலவையுடன் தக்காளியை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  5. 5

    வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து அரைத்த கலவையை சேர்த்து வதக்கவும்.

  6. 6

    வதங்கியபின் புளி கரைசலை அதில் சேர்க்கவும். கருவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்க்கவும்

  7. 7

    அதிக கொதிக்க விடாமல் லேசாக ஒரு கொதி விட்டு இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
KalaiSelvi G
அன்று

Similar Recipes