கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்

ஆயுர்வேத வைதியர்கள் தனியா (கொத்தமல்லி விதை), பூண்டு, இஞ்சி நிறைய சாப்பாட்டில் சேர்த்து கொள்ளுங்கள் கொரோனாவை எதிர்த்துப் போராட என்று அறிவுரை கூறுகிறார்கள், அம்மா கொத்தமல்லி விதை துவையல் செய்வார்கள். ஆனால் பூண்டு சமையலில் சேர்க்கமாட்டார்கள், சில ஆண்டுகளாக நான் பூண்டு சேர்த்துக் கொள்ளுகிறேன், சூடான வாணலியில் முதலில் உளுந்தை சிவக்க வறுத்து, பின் அதனுடன் சீரகம், கொத்தமல்லி விதை, மிளகாய் சேர்த்து வறுத்து தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைய்தேன். சிறிது எண்ணெயில் பச்சை கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பெருங்காயம் (Hing) சேர்த்து வதக்கி கொண்டேன். ஊறவைத்த சாமான்களை முதலில் பிளென்டரில் அறைத்து, கூட வதக்கலை புளி பேஸ்ட் சேர்த்து அறைத்தேன், உப்பு சேர்த்து துவையலை இட்லி உடன் சுவைத்தேன். எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் கலந்தது.
ஒரு தேக்கரண்டி துவையலோடு தக்காளி, வேகவைத்த பருப்பு சேர்த்து சுவையான ரசமும் செய்தேன். சமைத்து ருசித்துப் பாருங்கள்
#goldenapron3 #immunity
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலி வைத்து உளுந்து சிவக்க வறுக்க. கொத்தமல்லி விதை, மிளகாய்’, சீரகம் சேர்த்து வறுக்க. வறுத்த பொருட்களை 3 கப் நீரில் ஊறவைக்க
மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலி வைத்து எண்ணை சூடு பண்ணி கொத்தமல்லி தழை,பெருங்காயம் (Hing), இஞ்சி, பூண்டு போட்டு வதக்க -4 நிமிடங்கள். - 3
பிலென்டரில் ஊற வைத்த சாமான்களை அறைக்க. பின் வதக்கிய சாமான்களை சேர்த்து புளி பேஸ்ட் உடன் அறைக்க. மழ மழவென்று அறைக்க அவசியமில்லை, உப்பு சேர்க்க. துவையல் தயார். ருசித்துப் பார்க்க.
- 4
துவையலை இட்லி, தோசை, அல்லது சோறோடு பரிமாறுக. சோறுடன் சிறிது எண்ணை சேர்த்து கலந்து சாப்பிடலாம். வறுவல், அப்பளம் சேர்த்து பரிமாறுக. தயிர் சாதத்திர்க்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்
- 5
1 மேஜை கரண்டி துவையலை ரசம் செய்ய உபயோகிக்க
ரசம் செய்ய:
மிதமான நெருப்பின் மேல் அடிகனமான பத்திரத்தில் சிறிது எண்ணை சூடு பண்ணி, கடுகு, பெருங்காயம் தாளிக்க. கறிவேப்பிலை, தக்காளி, குக்கரில் வேகவைத்த துவரம் பருப்பு சேர்க்க. 5 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. அடுப்பை அணைக்க. எலுமிச்சம் பழத்தை ரசத்தில் பிழிந்து உப்பு சேர்க்க. - 6
மணமான சுவையான சத்தான நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ரசம் தயார். பருகி ருசித்து பரிமாறுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

கொத்தமல்லி ரசம்


வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்


பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்


இட்லி உப்புமா


சிகப்பு ரோஜா ரசம்


புதினா ரசம்


கொத்து கடலை சுண்டல்


அன்னாசி பழ ரசம்


பீட் ரூட் ரசம்


கேரட் கூட்டு


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)


ஸ்டவ்ட் புடலை


முடக்கத்தான் கீரை உருண்டை குழம்பு (Mudakkathaan keerai urundai kulambu recipe in tamil)


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு


கையில் பிடிக்க ஒரு சுவையான காய்கறி பொக்கே (boquet)


மிளகு ஜீரா சாத்தமுது (ரசம்)


குழி பணியாரம்


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி


வேப்பம்பூ வெல்ல பச்சடி


சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)


ப்ரொக்கோலி புலவ்


காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)


சுவையான அடை


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா


பீன்ஸ் ப்ரொக்கோலி பொறிச்ச கூட்டு


பஜ்ஜிகள் பலவிதம்


ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)


பாசி பயறு இட்லி


திப்பிலி ரசம்(thippili rasam recipe in tamil)

கமெண்ட் (2)