மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா

சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel
மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா
சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
கிண்ணத்தில் மாவு (all purpose enriched wheat flour),பொடித்த சக்கரை, உப்பு, பேகிங் சோடா போட்டு விஸ்க் செய்து கலந்து கொள்ளுங்கள். நடுவில் சின்ன குழி செய்து, எண்ணை
தயிர் சேர்த்து கையால் ஒன்றாக சேருங்கள். பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையுங்கள். சப்பாத்தி மாவூ செய்வது போல நீட் (knead) செய்க. மாவு சாவ்டாக (soft) வழ வழ வென்று இருக்க வேண்டும். விரலால் அழுத்தினால். அழுத்தின இடம் மேலே உடனே வரவேண்டும். இரண்டு கைகள் நடுவில் மாவை வைத்து மடித்து மடித்து நீட் செய்க (படம்) - 3
மாவை பந்து போல உருட்டி, கிண்ணத்தை துணியாலோ அல்லது பிளாஸ்டிக் ஷீட் போட்டு முடிவைக்க -3-4 மணி நேரம். மாவு இரண்டு மடங்காக உப்பும் வரை. மாவை எடுத்து கிரஸ்ட் செய்ய: நீட் செய்து சின்ன உருண்டை செய்க. 6 உருண்டைகள் செயல்லாம். உருண்டையை இரண்டு கைகள் நடுவில் மாவை வைத்து மடித்து மடித்து நீட் செய்து மாவை பந்து போல உருட்டி, சப்பாத்தி கல் மேல் வைத்து உங்களுக்கு பிடித்த வடிவில் கிரஸ்ட் செய்க. விரல்களால் பிடித்து இழத்துக் கொள்ளலாம். கிரஸ்ட் டாப்பிங் (topping): சின்ன துருவியால் பூண்டை துருவி மேலே போடுக.
- 4
கொத்தமல்லி மல்லி, சீரகம் தூவுக. குழவியை அதன் மேல் உருட்டுக தூவிய பொருட்கள் ஒட்டிக்கொள்ளும்.(படம்) கிரஸ்ட் சுட தயார். மிதமான நெருப்பின் மேல் ஸ்கிலெட்டை. (skillet) வைக்க. மேலே தண்ணிர் தெளித்தால் ஆவி வரவேண்டும். வெண்ணை தடவி போடுக. நெருப்பை சிறிது குறைக்க. மேல் பக்கம் குமிழ்கள் வரும். மேல் பக்கத்தின் மேலே வெண்ணை தடவி திருப்பி வேக வைக்க.
பிரவுன் ஆகும். கிரஸ்ட் தயார். - 5
ஒரு பீட்ஸா டாப்பிங் (topping)
பீட்ஸா கிரஸ்ட் மேல ஷ்ரேட்டேட் சீஸ் பரப்பி அதன் மேல்
பச்சை, சிகப்பு, மஞ்சள் காப்சிகம் போட்டு மைக்ரோவேவ் செய்க-2-3 நிமிடங்கள். சீஸ் உருகும், வெளியே எடுத்து பீட்ஸா ஸ்பைஸ் மிக்ஸ் தூவுங்கள். மிளகு பொடி, மிளகாய் பொடி கூட துவலாம்.சுவையான பீட்ஸா ருசித்து பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சுவையான சத்தான நான்
எளிதில் செய்யக்கூடிய நான் . பட்டர் மசாலாவுடன் சாபிட்டால் தேவாமிருதம் #combo3 Lakshmi Sridharan Ph D -
பீட்ஸா பைட்ஸ்
#PDபைட் சைஸ் பீட்ஸா சிறந்த பார்டி appetizer; சிறுவர் பெரியவர் எல்லோரும் விரும்பி சுவைப்பார்கள். காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். Lakshmi Sridharan Ph D -
-
-
ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்
சத்து சுவை மிகுந்த காய்கறிகள், சீஸ் ஸ்டவீங்குடன் குடை மிளகாய்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பீட்ஸா பைட் (Pizza bite recipe in tamil)
பைட் சைஸ் பீட்ஸா-- உங்கள் பசங்களுக்கு வேண்டிய காரம், சீஸ், சேர்த்துக்கொள்ளுங்கள் ஏராளமான சத்துக்கள், நோய் தடுக்கும் சக்தி கொண்ட மஷ்ரூம், தக்காளி, ஆலிவ் சேர்த்து செய்த பீட்ஸா பைட். #kids1 Lakshmi Sridharan Ph D -
சோடா பிரட் (Irish soda bread)
சோடா பிரட் (Irish soda bread) செய்வது சுலபம். நல்ல ருசி #bake Lakshmi Sridharan Ph D -
பேகல்(bagel recipe in tamil)
#wt2காலம் நேரம் பார்க்க வேண்டாம். காலை, மாலை, மதியம், இரவு எப்ப வேண்டுமானாலும் டோஸ்ட் செய்து ரூசிக்கலாம். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, எண்ணையில் பொறிக்க வேண்டாம். மைதா மாவில்லை Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil
#milkஇந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன,சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D -
வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட் Lakshmi Sridharan Ph D -
பால் போளி (பூரி) (Paal poli recipe in tamil)
போகி பண்டிகைக்கு பால் பூரிசின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். ஏலக்காய் தூள், அ குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். #pongal Lakshmi Sridharan Ph D -
லிக்விட் பரோடா, கூட்டு
எளிதில் செய்யக்கூடிய பரோடா. நீட் செய்ய வேண்டியதில்லை. தக்காளி, கத்திரிக்காய், கொண்ட கடலை (சிக் பீஸ்) கூட்டு: பரதம், விடமின்கள், உலோகசத்துக்கள், அன்டை ஆக்சிடேன்ட்ஸ் நிறைத சுவையான கூட்டு. #everyday2 Lakshmi Sridharan Ph D -
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா
#pjநான் மிகவும் விரும்பும் பஞ்சாபி உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. சாஃப்ட் mouth watering இது செய்ய பொறுமை தேவை. it is worth it . #pj Lakshmi Sridharan Ph D -
உருளை டம்ப்லிங்
சுவையான கம்ஃபர்ட் பூட்.(COMFORT FOOD). டம்ப்லிங் உள்ளே மஷ்ரூம் பிளலிங்க. கூட சீஸ் சாஸ். சிறுவர்கள் விரும்பி சுவைப்பார்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் சுருள் தோசை
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. முட்டைகோஸ் புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியது. #everyday1 Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மினி பேன் கேக்
#ypஏகப்பட்ட உலோக சத்துக்கள், முக்கியமாக நார் சத்து விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன, l Lakshmi Sridharan Ph D -
பழ தோசை (Fruit pancakes)
அமெரிக்காவின் banana பேன்கேக் இந்த வட்டாரத்தின் பழ தோசை. இது வேலூர் பாபுலர் உணவு. அமெரிக்காவில் பேன்கேக் ஹவுஸில் பல வித பழங்களை சேர்த்து பேன்கேக் செய்வார்கள். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம்.தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, , strawberries சுலபமாக கிடைக்கும் எல்லா பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும். இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #vellore #vattaram Lakshmi Sridharan Ph D -
முடக்கத்தான் கீரை கூட்டு
டிரக் லோட் முடக்கத்தான் கீரை என் தோட்டத்தில். நாட்டு மருத்துவத்தில் இதற்க்கு தனி இடம். வேர் , இலை , காய் எல்லாமே நலம் தரும் மூட்டு வலிக்கு, பயத்தம் பருப்பு, கீரை, தேங்காய் பால் சேர்ந்த சத்தான சுவையான கூட்டு. உணவுடன் கீரையை எப்பொழுதும் சேர்க்கவேண்டும் #ONEPOT Lakshmi Sridharan Ph D -
ஜோவர் (சோளம்) கலந்த தோசை (Sola dosai recipe in tamil)
ஜோவர் சத்து நிறைந்த சிறு தானியம். தோசை சத்தும், சுவையும் கூடியது. திசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள் #Heart Lakshmi Sridharan Ph D -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
இட்லி உப்புமா
இரண்டு நாட்களாக மீதி 6 இட்லிகள் ரெப்ரிஜிரேட்டர் உள் இருந்தன. அவற்றை மெத்து மெத்தாக 5 நிமிடங்கள் நீராவியில் வைத்தேன். ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து, இட்லிகளை கையால் சின்னசின்ன துண்டாக்கி சேர்த்து கிறினேன். கூடவே காரம் சாரமான இட்லி பொடியும் சேர்த்தேன். இட்லி பொடி நான் செய்தது. கடலை பருப்பு, வேர்க்கடலை, மிளகு, எள், வால்நட், வர மிளகாய் எல்லாம் வருத்து செய்த வாசனையான கார சாரமான பொடி சேர்த்ததால் இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருந்தது. #goldenapron3, leftover #uppuma, #lockdown Lakshmi Sridharan Ph D -
காய்கறி கசோரி
இரண்டு நாட்களுக்கு முன் ஸ்பைஸி உருளை, பச்சை பாட்டணி, கேரட் வெங்காயம் கலந்த ஸ்பைஸி கறியமுது. இன்று ஸ்பைஸி கசோரி. ரிவைன்ட் எண்ணை, ரிவைன்ட் மைதா என் சமையலில் உபயோகிப்பதில்லை #leftover Lakshmi Sridharan Ph D -
க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)
#CF9கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும், Lakshmi Sridharan Ph D -
கிள்ளி போட்ட சாம்பாரா? சில்லி (மிளகாய்)போட்ட சாம்பாரா?
ஹோட்டல் ஸ்டைல் கார சாரமான ருசியான சில்லி சாம்பார் #hotel Lakshmi Sridharan Ph D -
வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)
அமெரிக்காவில் பேன்கேக் பாப்புலர். தமிழ் நாட்டில் தோசை எக்ஸ்பிரஸ் இருப்பது போல இங்கு பேன்கேக் ஹவுஸ். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம். தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, எல்லா வாழைப்பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B, c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும், இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #CookpadTurns4 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (7)