வேப்பம்பூ வெல்ல பச்சடி

தமிழ் புத்தாண்டு அன்று செய்வது வழக்கம். இனிப்பும். கசப்பும் கலந்தது வாழ்க்கை என்பதர்க்காக, என் ரெஸிபி வெல்லம், இஞ்சி, பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு சேர்ந்தது #arusuvai6
வேப்பம்பூ வெல்ல பச்சடி
தமிழ் புத்தாண்டு அன்று செய்வது வழக்கம். இனிப்பும். கசப்பும் கலந்தது வாழ்க்கை என்பதர்க்காக, என் ரெஸிபி வெல்லம், இஞ்சி, பச்சை மிளகாய், வேப்பம்பூ, உப்பு சேர்ந்தது #arusuvai6
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு பாத்திரத்தில் சூடான உருகிய வெண்ணையில் வேப்பம்பூ வறுக்க-1 நிமிடம். இஞ்சி, பச்சை மிளகாய் சேர்க்க. 2 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. நாட்டுசக்கரை சேர்த்து கிளற. நெருப்பைக் குறைக்க. கொதித்து பாதி சுருங்கட்டும். அடுப்பை அணைக்க. உப்பு சேர்க்க. வெல்ல பச்சடி தயார்
- 3
ருசித்து பரிமாறுக. தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்
நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. புரதத்திரக்கு பருப்பு. பூண்டு, இஞ்சி, பல கொடிய வியாதிகளை தடுக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் துவையில் ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #immunity Lakshmi Sridharan Ph D -
-
பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்
லாக் டவுன் போது வீட்டிலிருக்கும் பொருட்களை விணாக்காமல் சிக்கனமாக அதே சமயத்தில் சுவையாகவும் சத்தாக்கவும் சமைப்பது தான் என் தீர்மானம், புரதத்திரக்கு பருப்பு துவையில். நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. அம்மா காலதிலிருந்தே இது இரண்டையும் ஒன்றாகதான் சாப்பிடுவோம். துவையலுக்கு துவரம் பருப்பு, உலர்ந்த சிகப்பூ மிளகாய், மிளகு மூன்றும் போதும், பருப்பு சிவக்க வருத்து, கூட மிளகாய், மிளகு சேர்த்து வருத்து. நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து , பின் அரைத்து உப்பு சேர்த்தால் துவையல் தயார். ரசத்திர்க்கு வேப்பம்பூ, புளி, உலர்ந்த சிகப்பூ மிளகாய் மூன்றும் போதும். கூட தேவையான உப்பு. வேப்பம்பூ, கறிவேப்பிலை இரண்டும் என் தோட்டத்து பொருட்கள். ஒரு தேக்கரண்டி எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளித்து உலர்ந்த சிகப்பூ மிளகாய், வேப்பம்பூ சேர்த்து வறுத்து புளிதண்ணி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ரசம் செய்தேன். வேப்பம்பூ ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #lockdown #book Lakshmi Sridharan Ph D -
மாம்பழ பழ இனிப்பு பச்சடி(mango sweet pachadi recipe in tamil)
#birthday2அம்மாவின் மாம்பழ பச்சடி இன்றும் என்றும் என் நாவில் இனிக்கும்.தமிழ் புத்தாண்டு அன்று கட்டாயம். நான் சிறிது வேறு விதமாக பச்சடி செய்தேன். காரமும் இனிப்பும் சேர்ந்த தனி சுவை. கூட கிராம்பு ஏலக்காய் பொடி வாசனையும் சுவையையும் கூடியது. Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் புடலை
நீராவியில் வேகவைத்த சுவையான ஸ்டவ்ட் புடலை. பிஞ்சு புடலை தேர்ந்தெடுக்க. அப்பொழுதுதான் வெட்டுவது எளிது. மசாலா பில்லிங் –வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கடலை மாவு, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்ந்தது #steam Lakshmi Sridharan Ph D -
முள்ளங்கி இட்லி
முள்ளங்கி சத்து நிறைந்த ஒரு காய்கறி, சக்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வைட்டமின் C அதிகம், புற்று நோயை தடுக்கும் சக்தியும், நோய் தடுக்கும் சக்தியும், ஜீரணத்தை அதிகமாக்கும் சக்தியும் கொண்டது. நலம் தரும் முள்ளங்கி இட்லி செய்தேன், புளித்த இட்லி மாவும், முள்ளங்கி துருவலும் சமமாக சேர்த்து, தாளித்து. பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, நீராவியில் வேகவைத்து சுவையான இட்லி செய்தேன். #idli#இட்லி Lakshmi Sridharan Ph D -
ப்ரொக்கோலி புலவ்
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை . ப்ரொக்கோலி, கேரட், குடை மிளகாய் நலம் தரும் பல நோய்களை தடுக்கும் காய்கறிகள். இலவங்கப்பட்டை, பூண்டு கொழுப்பை குறைக்கும்; இரத்த நோய்களை குறைக்கும். இஞ்சி, மஞ்சள் புற்று நோய், இருதய நோய்கள், மூட்டுவலி, எலும்பு ஆஸ்டியோபோரோசிஸ், இன்னும் பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டவை. இது சத்து, சுவை, நிறம் , மணம் நிறைந்த புலவ்.ப்ரொக்கோலி மொக்கு + கீழ் தண்டு, குடை மிளகாய், கேரட் தூண்டுகளை பிளென்ச் செய்தேன். காய்கறிகள் பிளென்ச் செய்த தண்ணீர் வெஜிடபிள் பிராத்(vegetable broth). அதை அரிசி வேகவைக்க உபயோகித்தேன். அரிசியை கொதிக்கும் வெஜிடபிள் பிராத்தில் 10 நிமிடம் ஊறவைத்தேன், கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து, கிராம்பு, இலவங்கப்பட்டை, மஞ்சள் சேர்த்து, வெங்காயம், பூண்டு புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கினேன். பின் வெண்ணை சேர்த்து ஸ்கில்லெட்டில் ஊர வைத்த அரிசியை சேர்த்தேன் அரிசி வெந்த பின் காய்கறிகளை சேர்த்து கிளறினேன். உப்பு சேர்த்து முந்திரியால் அலங்கரித்தேன். சுவை, சத்து, மணம், நோய் தடுக்கும் சக்தியை அதிகரிக்கும் புலவ் தயார். வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் அனைத்தையும் தயிரில் கலந்து ராய்தா (பச்சடி) செய்தேன்.#immunity #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
இட்லி உப்புமா
இரண்டு நாட்களாக மீதி 6 இட்லிகள் ரெப்ரிஜிரேட்டர் உள் இருந்தன. அவற்றை மெத்து மெத்தாக 5 நிமிடங்கள் நீராவியில் வைத்தேன். ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து, இட்லிகளை கையால் சின்னசின்ன துண்டாக்கி சேர்த்து கிறினேன். கூடவே காரம் சாரமான இட்லி பொடியும் சேர்த்தேன். இட்லி பொடி நான் செய்தது. கடலை பருப்பு, வேர்க்கடலை, மிளகு, எள், வால்நட், வர மிளகாய் எல்லாம் வருத்து செய்த வாசனையான கார சாரமான பொடி சேர்த்ததால் இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருந்தது. #goldenapron3, leftover #uppuma, #lockdown Lakshmi Sridharan Ph D -
வேப்பம்பூ தேங்காய் டாக் சாக்லேட்
கசப்பான வேப்பம் பூவை வைத்து இனிப்பான ஒரு டாக் சாக்லேட். #arusuvai6 Vaishnavi @ DroolSome -
வெந்தய கீரை வடை
இந்த ரெஸிபி நலம் கூடிய ரெஸிபி. எண்ணையில் பொரித்தாலும், வடை எண்ணையை குடிக்காது. வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் அறைத்து செய்த பேஸ்ட் கூட கடலை மாவு, அவில், வெந்தய கீரை , மிளகாய் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் சேர்த்து பிசைந்து வடை தட்டி எண்ணையில் பொரித்ததால் இது எண்ணையை குடிக்காது#arusuvai6 Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு நோக்கி (Gnocchi (Urulaikilanku gnocchi recipe in tamil)
இது ஒரு சுவையான இத்தாலியன் ரெஸிபி. வெளி நாட்டு ரேசிபிக்கள் தமிழ் நாட்டில் இப்பொழுது எங்கேயும் செய்கிறார்கள். இந்த ரெசிபி செய்கிறார்களோ, இல்லயா என்று எனக்கு தெரியாது. இது செய்வது எளிது. சின்ன பசங்க விரும்பி சாப்பிடுவார்கள். என் தோட்டத்தில் எல்லா சமையல் மூலிகைகளும் வளர்கின்றன.சே ஜ் கிடைக்கவிட்டால் பேசில் உபயோகிக்கலாம். #flour1 Lakshmi Sridharan Ph D -
உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),
#pjஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
-
-
வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்
வாங்கி பாத் கன்னடம் ; தமிழில் கத்திரிக்காய் சாதம் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
-
ஸ்டவ்ட் பாகற்காய் (Stuffed paakarkaai recipe in tamil)
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
பச்சை மிளகாய் சிக்கன்
#colours2காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து. Asma Parveen -
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
-
கொத்து கடலை சுண்டல்
சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான குழந்தைகள் விரும்பும் ஸ்னாக். கடலையை சில மணி நீரில் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்தேன். மிதமான நெருப்பின் மீது ஒரு வாணலியில் சிறிது எண்ணையில் காடு, சீரகம், பெருங்காயம், உளுந்து தாளித்து, இஞ்சி, பூண்டு,மிளகாய் சேர்த்து, வெங்காயம் போட்டு வதக்கினேன் , வெந்த கடலை சேர்த்து கிளறி உப்பு போட்டு கிளறி அடுப்பை அணைத்தேன், 30 நிமிடங்களில் சுவையான சுண்டல் தயார்.# ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
சுவையான வாசனையான லெமன் சாதம் (suvaiyana vasaai yana lemon saatham recipe in Tamil)
லெமன் எலுமிச்சை பழம் இனத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் நான் இந்த மரத்தைப் பார்ததில்லை. மரமும் பெரியது, பழமும் பெரியது. நல்ல வாசனை, நிறைய சாறு. எங்கள் தோட்டத்தில் இப்பொழுது நூற்றுக்கணக்கான பழங்கள். வாரத்திரக்கு ஒரு முறையாவது லெமன் சாதம் பண்ணுவேன. குக்கரில் சோறு உதிர உதிரியாகப் பண்ணிவிட்டு, அதோடு பழச்சாறு, தாளித்த கடுகு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, பெருங்காயம், உப்பு போட்டு சுவையும் மணமும் நிறைந்த லெமன் சாதம் செய்தேன், வறுத்த முந்திரி, கொத்தமல்லி போட்டு அலங்கரிதேன். #goldenapron3 #book Lakshmi Sridharan Ph D -
வேப்பம்பூ ரசம்
எங்கள் வீட்டில் மாதம் ஒரு முறை இந்த ரசம் கண்டிப்பாக செய்வது உண்டு. லேசான கசப்பும், நல்ல வாசனையும், காரம், சுவை மிகுந்த உடல் ஆரோக்யத்திற்கு ஏற்ற ரசம். வேப்பம்பூ சூப்பாகவும் மதிய உணவின் முன் அருந்தலாம், வேப்பம்பூ சீசன் பொழுது பூக்களை சேகரித்து நிழலில் உலர்த்தி ஒரு வருடத்திற்கு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்வோம். Subhashni Venkatesh -
பால் போளி
#பொங்கல்ரெசிபிஸ்பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகை. அன்று விதவிதமாக போளி செய்து கொண்டாடுவது வழக்கம். தேங்காய் போளி, பருப்பு போளி, பால் போளி என வகைவகையாக போளி செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்
இது என் சொந்த ரெஸிபி, கற்பனையும் (creativity) கை மணமும் கலந்த புளி சேர்க்காத ருசியான சாம்பார். #sambarrasam Lakshmi Sridharan Ph D -
பீட் ரூட் பேட்டீஸ்--வடை (beet root patties)
#kkஎண்ணையில் பொரிக்காத ஆரோக்யமான பேட்டீஸ். பீட் ரூட் கூட வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, ஸ்பைஸ் பொடிகளோடு சேர்த்து சுவையான சத்தான வடைகள் செய்தேன் Lakshmi Sridharan Ph D -
அவரைக்காய் புலவ்
அவரைக்காயில் வைட்டமின் A, B, E, நார் சத்து, புரதம். இன்னும் பல நலம் தரும் சத்துகளும் உள்ளன. இது பருப்பு குடும்பத்தை சேர்ந்தது.பொரியலும், பொரிச்ச கூட்டும் செய்து அலுத்து விட்டது. அதனால் இன்று அவரைக் அவரைக்காயில் புலவ் செய்தேன். வெண்ணையில் கடுகு, சீரகம் பெருங்காயம் தாளித்த பின், கிராம்பு, லவங்கப்பட்டை. ஏலக்காய் சேரத்து, இஞ்சி, பூண்டு போட்டு, வெங்காயத்தை வதக்கினேன். ஊறவைத்த அரிசியை களைந்து , வடித்து அதில் சேர்த்தேன். அரசி பாதி வெந்த பின் அவரைக்காயை சேர்த்து தண்ணீரும் தேங்காய் பாலும் சேர்த்துக்கொண்டு வேகவைத்தேன். எல்லா பொருட்களும் கலந்து வெந்த பின். அடுப்பிலிருந்து இறக்கினேன். வறுத்த முந்திரி போட்டு அலங்கரித்தேன். சுவையான சத்தான ருசியான புலவ் தயார்.#book Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி விதை, கொத்தமல்லி தழை, இலை, துவையல்தனியா ரசம்
ஆயுர்வேத வைதியர்கள் தனியா (கொத்தமல்லி விதை), பூண்டு, இஞ்சி நிறைய சாப்பாட்டில் சேர்த்து கொள்ளுங்கள் கொரோனாவை எதிர்த்துப் போராட என்று அறிவுரை கூறுகிறார்கள், அம்மா கொத்தமல்லி விதை துவையல் செய்வார்கள். ஆனால் பூண்டு சமையலில் சேர்க்கமாட்டார்கள், சில ஆண்டுகளாக நான் பூண்டு சேர்த்துக் கொள்ளுகிறேன், சூடான வாணலியில் முதலில் உளுந்தை சிவக்க வறுத்து, பின் அதனுடன் சீரகம், கொத்தமல்லி விதை, மிளகாய் சேர்த்து வறுத்து தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைய்தேன். சிறிது எண்ணெயில் பச்சை கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பெருங்காயம் (Hing) சேர்த்து வதக்கி கொண்டேன். ஊறவைத்த சாமான்களை முதலில் பிளென்டரில் அறைத்து, கூட வதக்கலை புளி பேஸ்ட் சேர்த்து அறைத்தேன், உப்பு சேர்த்து துவையலை இட்லி உடன் சுவைத்தேன். எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் கலந்தது.ஒரு தேக்கரண்டி துவையலோடு தக்காளி, வேகவைத்த பருப்பு சேர்த்து சுவையான ரசமும் செய்தேன். சமைத்து ருசித்துப் பாருங்கள் #goldenapron3 #immunity Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
உளுந்து வடை, முட்டைகோஸ் காலிஃப்ளவர் வடை
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் எங்கள் வீட்டில் . . முட்டைகோஸ் காலிஃப்ளவர் எதிர்க்கும் சக்தி கொண்டவை. நான் அதிகம் விரும்பூம் காய்கறிகள், #everyday4 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)