குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3

குடைமிளகாய், தக்காளி சட்னி (Kudamilakaai thakkali chutney recipe in tamil)

இதில் இரும்பு சத்து அதிகமுள்ளதால் மூட்டு வலியை குறைக்கும். அதிக நீர் உள்ளதால் உடல் எடையை குறைக்கும். சரும வறட்சியை நீக்கும். வாயுத்தொல்லை நீங்கும். எனவே அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். #nutrient 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்கள்
ஆறு பேர் சாப்பிடலாம்.
  1. 3குடை மிளகாய்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 1பெரிய தக்காளி
  4. 4வற்றல் மிளகாய்
  5. கறிவேப்பிலை
  6. 1/4டீஸ்பூன் சீரகம்
  7. 1ஸ்பூன் எண்ணை
  8. தாளிக்க
  9. கடுகு
  10. உளுந்து பருப்பு

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்கள்
  1. 1

    குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் எல்லாம் வெட்டி வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணை ஊற்றி, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், வெங்காயம், குடைமிளகாய், தக்காளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்கி, உப்பு சேர்த்து சூடாறியவுடன் மிக்ஸியில் போட்டு மையாக அரைக்கவும்.

  3. 3

    சட்னியை கிண்ணத்தில் போட்டு, கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்.

  4. 4

    இப்போது சுவையான குடைமிளகாய் சட்னி தயார்.

  5. 5

    இந்த சட்னி இட்லி, தோசை, அடை எல்லாவற்றுடனும் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபம்.

  6. 6

    குடைமிளகாய் காரத்தன்மை உள்ளதால், மிளகாய் வற்றல் குறைவாக சேர்க்கவும். பச்சை மிளகாய் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes