சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் கோகோ பவுடர்
  2. 11/2 கப் மைதா
  3. 3 வாழைப்பழம்
  4. 3/4 கப் சீனி
  5. 1/2 கப் எண்ணெய்
  6. 1 தேக்கரண்டி வெனிலா எசன்ஸ்
  7. 1/2 கப் தண்ணீர்
  8. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  9. 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  10. 1/4 தேக்கரண்டி உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைப்பழம், சீனி சேர்த்து மிக்ஸியில் அடித்து ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடித்து வைத்த வாழைப்பழத்துடன் எண்ணெய் மற்றும் எசன்ஸ் சேர்த்து விஸ்க் பண்ணவும்.

  3. 3

    மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை சலித்துக் கொள்ளவும்.

  4. 4

    சலித்து வைத்த மைதா கலவையை வாழைப்பழக் கலவையில் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்.

  5. 5

    அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  6. 6

    ஒரு குக்கரை வெயிட், காஸ்கட் இல்லாமல் மூடி வைத்து சிம்மில் பத்து நிமிடங்கள் சூடு பண்ணவும்.

  7. 7

    கலந்து வைத்த கேக் கலவையை தயார் செய்து வைத்துள்ள கேக் டின்னில் ஊற்றவும்.

  8. 8

    சூடான குக்கரில் ஒரு ஸ்டாண்ட் வைத்து கேக் டின்னை வைத்து குக்கரை மூடி நாற்பது நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.

  9. 9

    கேக் தயாரானதும் வெளியே எடுத்து ஆற வைக்கவும். நன்கு ஆறிய பிறகு துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
அன்று

Similar Recipes