சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி  நேரம்
  1. 1& 1/2கப் மைதா
  2. 1/2 கப் கோகோ பவுடர்
  3. 2 வாழைப் பழம்
  4. 1/2 கப் சர்க்கரை
  5. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/2பேக்கிங் சோடா
  7. 1 டீஸ்பூன் வினிகர்
  8. 1/2 கப் தண்ணீர்
  9. 1/2 கப் பால்
  10. 1/4 டீஸ்பூன் உப்பு
  11. 1/2 கப் டூட்டி புரூட்டி
  12. 1/2 கப் எண்ணை
  13. 1 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்
  14. 2 டேபிள் ஸ்பூன் சாக்லேட் வெர்மிசெலி

சமையல் குறிப்புகள்

1மணி  நேரம்
  1. 1

    முதலில் வாழைப்பழம், சர்க்கரையை மிக்ஸியில் அல்லது ப்ளெண்டரில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  2. 2

    அரைத்தவிழுதை ஒரு பௌலில் சேர்க்கவும்.

  3. 3

    பின் எண்ணை சேர்க்கவும்.வெனிலா எசென்ஸ், வினிகர் சேர்த்து ஒயர் விஷ்க்கில் கலக்கவும்.

  4. 4

    பின்னர் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து சலித்து, பழக்கலவை பௌலில் சேர்த்து கலந்து, பால்,தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  5. 5

    பின் அத்துடன் டூட்டி புரூட்டி சேர்த்து கலக்கவும்.

  6. 6

    பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து, அதில் கேக் கலவையை சேர்த்து மேலே டூட்டி புரூட்டி, சாக்லேட் வெர்மிசெலி தூவி பேக் செய்ய தயாராக வைக்கவும்.

  7. 7

    மைக்ரோ வேவ் ஓவனை பத்து நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து, தயாராக வைத்துள்ள பேக்கிங் ட்ரேயை வைத்து நாற்பது நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் கேக் தயார்.

  8. 8

    பேக் செய்த கேக் கொஞ்சம் சூடு தனித்தவுடன் டிமோல்ட் செய்து, பட்டர் பேப்பரை எடுக்கவும்.

  9. 9

    இப்போது மிகவும் சுவையான சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் சுவைக்கத்தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes