தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. வரகரிசி 1.5 கப்
  2. சிறுபருப்பு அரை கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. பச்சை மிளகாய்-2
  6. மிளகு இரண்டு தேக்கரண்டி
  7. சீரகம் ஒரு தேக்கரண்டி
  8. நெய் 2 தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வரகு அரிசி மற்றும் பருப்பு தண்ணீர் ஊற்றி அலசி 10 நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    குக்கரில் நெய் ஊற்றி கறிவேப்பிலை பச்சை மிளகாய் சீரகம் பொடித்த மிளகு நன்றாக வறுக்கவும்.

  3. 3

    இதன்மேல் 6 கப் தண்ணீர் ஊற்றி வரகு அரிசி பருப்பு சேர்த்து உப்பு போட்டு 2 விசில் வைத்து எடுக்கவும்.

  4. 4

    ஆவி போனவுடன் சற்று கெட்டியாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் நன்கு கொதிக்கும் நீரை எடுத்துஅதனை பொங்கல் மேல் சேர்த்து கிளறவும்.

  5. 5

    கடைசியில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பு தாளித்து பொங்கலுடன் சேர்க்கலாம்.

  6. 6

    சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes