ரெயின்போ ஜெல்லி  மில்க் ஷேக்

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#cookwithfriends
#Nazeema Banu
ரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. ஜெல்லி செய்ய:
  2. 5கிராம் சைனா கிராஸ்
  3. 450மில்லி தண்ணீர்
  4. 4டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  5. ஆரஞ்சு கலர் சிறிது
  6. மஞ்சள் கலர் சிறிது
  7. ரோஸ் நிறம் சிறிது
  8. பச்சை நிறம் சிறிது
  9. புளுபெர்ரி கலர் சிறிது
  10. ரோஸ் எசென்ஸ் சில துளிகள்
  11. மில்க் ஷேக் செய்ய;
  12. 700மில்லி பால்
  13. 1/4கப் மில்க் மெயின்ட்
  14. 6டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  15. 1_1/2 ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
  16. 2ஸ்பூன் சப்ஜா விதை (பரிமாறுவதற்கு)

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் *சப்ஜா விதை ஐ அரை மணி நேரம் வரை ஊறவிடவும்* சைனா கிராஸ் ஐ 100 மில்லி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வரை ஊறவிடவும்

  2. 2

    ஜெல்லி செய்ய:
    350 மில்லி தண்ணீர் ஐ அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் ஊறவைத்த சைனா கிராஸ் ஐ தண்ணீரோடு சேர்த்து நன்கு கிளறவும் சைனா கிராஸ் கரைந்ததும் சர்க்கரை ஐ சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்

  3. 3

    பின் வடிகட்டி கொண்டு ஐந்து பாகமாக சம அளவில் பிரித்து கொள்ளவும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் ரோஸ் எசென்ஸ் ஐ ஒவ்வொன்றிலும் இரண்டு துளி விட்டு நன்கு கலந்து கொள்ளவும்

  5. 5

    பின் அதை தனித்தனியாக ப்ளேட்டில் ஊற்றவும்

  6. 6

    எல்லா கலரும் ஊற்றி சமப்படுத்தி ஃபிரிட்ஜில அரை மணி நேரம் வரை வைக்கவும்

  7. 7

    பின் வெளியே எடுத்து கத்தியால் கீறி கொள்ளவும் பின் தனித்தனியாக கப்பில் சேகரித்து கொள்ளவும்

  8. 8

    ரெடியாக உள்ள ஜெல்லி மற்றும் ஊறவைத்த சப்ஜா விதை ஐ வடிகட்டி கொண்டு அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்

  9. 9

    மில்க் ஷேக் செய்ய:. பாலை அடுப்பில் வைத்து கொதி வந்ததும் சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வரை கொதித்ததும் கஸ்டர்ட் பவுடர் ஐ 4 ஸ்பூன் ஆறிய பாலில் கட்டியில்லாமல் கலந்து ஊற்றி நன்கு கிளறவும்

  10. 10

    பின் மில்க்மெயின்ட் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி ஆறவிட்டு ஃபிரிட்ஜில் வைத்து குளிர விடவும்

  11. 11

    பரிமாறும் முறை:. ஒரு உயரமான டம்ளரில் முதலில் ரோஸ் நிற ஜெல்லியை போடவும் பின் மஞ்சள் நிற ஜெல்லியை போடவும் பின் புளூ நிற ஜெல்லியை போடவும்

  12. 12

    பின் ஊறவைத்த சப்ஜா விதை ஐ வடிகட்டி கொண்டு போடவும் பின் ஆரஞ்சு நிற ஜெல்லியை போடவும் பின் பச்சை நிற ஜெல்லியை போடவும்

  13. 13

    பின் மீண்டும் சப்ஜா விதை ஐ போடவும்

  14. 14

    பின் குளிரவிட்ட மில்க் ஷேக் ஐ சிறிது சிறிதாக ஊற்றவும்

  15. 15

    பின் மேலே மீண்டும் மீதமுள்ள அனைத்து கலர் ஜெல்லியையும் சிறிது சிறிதாக போடவும்

  16. 16

    பின் மெதுவாக ஸ்பூன் கொண்டு கலந்து ஜில்லென்று பரிமாறவும்

  17. 17

    சுவையான ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes