பீட் ரூட் ரசம்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

பீட் ரூட் இரத்தத்தை சுத்தம் செய்யும். சத்து சுவை ரசம் நிறைந்த ரசம் –குடம் குடமாய் குடிப்பேன். (JUST KIDDING)
அழகிய நிறம், காரம், மணம் கொண்ட ரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். #sambarrasam

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. ரசப் பொடி stock
  2. 5 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணை
  3. 2 ½ கப் தனியா
  4. ¾ கப் பெருஞ்சீரகம்
  5. ¼ கப் வெந்தயம்
  6. 15கார சிகப்பு மிளகாய்
  7. 10 கறிவேப்பிலை
  8. 1 தேக்கரண்டி பெருங்காயம்
  9. ரசம் செய்ய:
  10. ¼ கப் துவரம்பருப்பு
  11. 1 கப் பீட் ரூட், குக்கரில் வேகவைத்து, தோலுரித்து நறுக்கியது
  12. 1 மேஜைகரண்டி நல்லெண்ணெய்
  13. 1 தேக்கரண்டி கடுகு
  14. 1 தேக்கரண்டி சீரகம்
  15. ½ தேக்கரண்டி மஞ்சள் பொடி
  16. சிட்டிகை பெருங்காயம்
  17. ½ தேக்கரண்டி புளி பேஸ்ட் (paste)
  18. 2 மேஜை கரண்டி ரச பொடி
  19. 2கார சிகப்பு மிளகாய்
  20. 2பச்சை மிளகாய், நறுக்கியது
  21. தேவையானஉப்பு
  22. 1 மேஜைகரண்டி இஞ்சி பூண்டு விழுது
  23. 1 கப் தக்காளி, நறுக்கியது

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  2. 2

    தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  3. 3

    ரசப் பொடி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் எண்ணை சிறிது சூடான பின் தனியா வறுக்க. பொன் நிறமானதும், ஒரு கிண்ணத்தி மேல் ஒரு ஜல்லடையில் வடிக்க. வறுத்த தனியாவை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பிண் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், பெருஞ்சீரகம் வறுக்க. சீரகம் பொறிந்த பின் முன் போலவே எண்ணையை வடிக்க. வறுத்த சீரகத்தை பேப்பர் டவல் மேல் போடுக. குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், வெந்தயம் வறுக்க. முன் போலவே எண்ணையை வடித்து, பேப்பர் டவல் மேல் போடுக.

  4. 4

    குறைந்த நெருப்பின் மேல் அதே வாணலியில் அதே எண்ணையில், சூடான எண்ணையில் மிளகாய் வறுக்க; காந்த வைக்காதீர்கள். இப்பொழுது அதே வாணலியில் எண்ணை சேர்க்காமல் கறி வேப்பிலை வறுக்க பச்சை வாசனை போக. பெருங்காயம் சேர்க்க. வீடு முழுவதும் வாசனை நிரம்பும்.வறுத்தபொருட்களை மிக்ஸியில் கொர கொரவென்று அறைக்க. பொடி தயார். தட்டில் போட்டு ஆற வைக்க. ஒரு air tight container இல் போட்டு சேமிது வைக்க. தேவையான பொழுது தேவையான அளவு எடுத்து சாம்பார், ரசம் செய்யலாம்

  5. 5

    பிரஷர் குக்கரில் பருப்பும், பீட் ரூட் இரண்டையும் வேகவைக்க
    குக்கர் பாத்திரத்தில் 4 கப் நீர் சேர்த்து பருப்பைக் குக்கரில் வேக வைக்க.
    பருப்பு பாத்திரத்தின் மேல் ஒரு பாத்திரத்தில் பீட் ரூட் வேகவைக்க.
    வேக வைத்த பீட் ரூட் தோல் உரிக்க. துண்டாக்குக. துண்டுகளை வேகவைத்த நீருடன் சேர்த்து அறைக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு அடி கனமான பாத்திரத்தில் சூடான எண்ணையில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளிக்க, மிளகாய், மஞ்சள் பொடி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க.

  6. 6

    தக்காளி சேர்த்து வதக்க, 1 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. கொதிக்க வைக்க. தக்காளி வெந்த பின் அரைத்த பீட் ரூட் சேர்க்க, 4 கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. வேகவைத்த பருப்பும், நீறும் சேர்த்து கிளறி கொதிக்க வைக்க-4-5 நிமிடங்கள்.

  7. 7

    புளி பேஸ்ட் 2 கப் நீரில் கரைத்து சேர்க்க. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும். ரச பொடி சேர்த்து கலக்க.. நன்றாக 4-5 நிமிடங்கள் கொதிக்கட்டும்பிநீ ன் உப்பு சேர்த்து கலக்கி அடுப்பை அணைக்க. கொத்தமல்லி கிள்ளிபோட்டு கலந்துகொள்ளுங்கள் ரஸம் தயார்.
    ருசித்துப் பார்க்க. பரிமாறுக. ரசம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes