முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903

முருங்கைக் கீரை சாம்பார் (Murunkai keerai sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஐந்து நபர்கள்
  1. 100 கிராம்,துவரம் பருப்பு
  2. 1 - கப், முருங்கைக் கீரை
  3. 2தக்காளி
  4. 1பெரியவெங்காயம்
  5. ஒரு ஸ்பூன் தாளிக்க கடுகு
  6. ஒரு ஸ்பூன்,சீரகம்
  7. கால் ஸ்பூன், பெருங்காயத் தூள்
  8. கொஞ்சம் கருவேப்பிலை,
  9. தேவையான அளவு எண்ணெய்,
  10. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    முதலில் 100 கிராம் பருப்பை எடுத்து நன்கு கழுவி பிறகு அதை குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  4. 4

    பிறகு அதில் பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும், வதங்கியதும் ஒரு கப் முருங்கைக்கீரையை போட்டு எண்ணெயில் நன்றாக வதக்கவும்.

  5. 5

    பிறகு அதில் தக்காளியை போட்டு வதக்கவும். கால் ஸ்பூன் பெருங்காயத்தை போடவும், பிறகு தேவையான அளவு உப்பை போடவும்

  6. 6

    பிறகு அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள்,கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ஹோட்டல் நன்கு கொதிக்க விடவும்

  7. 7

    நன்கு கொதி வந்தவுடன் வேகவைத்த பருப்பை அதில் ஊற்றி கொதிக்கவிடவும் ‌

  8. 8

    பிறகு ஒரு எலுமிச்சை அளவு புளியை ஊறவைத்த சாறை எடுத்து இந்த சாம்பாரில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

  9. 9

    இப்போது சுவையான முருங்கைக்கீரை சாம்பார் ரெடி ‌. முருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால் தண்ணீரில் முருங்கைக் கீரையை போட்டு வேகவைத்து, வேகவைத்த தண்ணீரை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes