தவா பிரை இட்லி (Tawa fry idly)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#leftover தவா பிரை இட்லி ஹைதராபாத் ஸ்பெஷல்.
காலையில் செய்து மீந்த இட்லி இருந்தால் இதே போல் தவா பிரை செய்யலாம். இது ஒரு ஹைதராபாத் ரோட்டு கடை ஸ்பெஷலும் கூட. அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.

தவா பிரை இட்லி (Tawa fry idly)

#leftover தவா பிரை இட்லி ஹைதராபாத் ஸ்பெஷல்.
காலையில் செய்து மீந்த இட்லி இருந்தால் இதே போல் தவா பிரை செய்யலாம். இது ஒரு ஹைதராபாத் ரோட்டு கடை ஸ்பெஷலும் கூட. அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
2 பேர்
  1. 6இட்லி காலையில் செய்து மீந்தது
  2. 1 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள்
  6. 1 டேபிள் ஸ்பூன் பாவ்பாஜி மசாலா
  7. 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  8. கறிவேப்பிலை
  9. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    காலையில் செய்து மீதமான இட்லிகளை, துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளி, மல்லி இலை எல்லாவற்றையும் நறுக்கி வைக்கவும்.

  3. 3

    தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடு செய்து, வெண்ணெய் சேர்த்து, உருகியதும், கடுகு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பாவ்பாஜி மசாலா சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இட்லி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து, மிதமான சூட்டில் கொஞ்சம் வதக்கி இறக்கி, மல்லி இலை தூவவும்.

  5. 5

    இப்போது காலையில் செய்த மீந்து போன இட்லி மிகவும் சுவையாகவும், கம கம பாவ் பாஜி மசாலா மணத்துடனும் தோசை தவாவில் செய்த தவா பிரை இட்லி சுவைக்கத்தயார்.

  6. 6

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

கமெண்ட் (9)

Viji Prem
Viji Prem @vijiprem24
Bavbaji masala illaina enna pannalam sis .. butter ku pathil ghee use pannalama sis

Similar Recipes