மிளகு வடை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

மொரு மொரு மிளகு வடை –ஒரு எளிய ரெஸிபி. சுவை, சத்து, மிகுந்தது ஆஞ்சநேயர் கோவிலில் வடை மாலை சின்ன சின்ன மிளகு வடைகளில் செய்வார்கள் #pepper

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 கப் உளுந்து
  2. 2 மேஜை கரண்டி மிளகு பொடி
  3. 1 மேஜை கரண்டி சீரகம்
  4. தேவையானஎண்ணை (சன்ஃபிளவர்) பொறிக்க
  5. 1 தேக்கரண்டி பெருங்காயப்பொடி
  6. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் 3 மடங்கு நீருடன் உளுந்தை ஊறவைக்க -6 மணி நேரம், களைந்து நிறை வடிக்க.
    நீர் சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக உளுந்தை பிளெண்டரில் போட்டு கெட்டியாக அறைக்க. உப்பு, மிளகு பொடி,சீரகம், பெருங்காயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஒரு பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டை செய்துக் கொள்ளுங்கள். நான் 6 உருண்டை செய்தேன். ஒரு வாழை இலையிலோ அல்லது வேறு காய்கறி செடி இலையிலோ சிறிது எண்ணை தடவி உருண்டையை கையால் மெல்லியதாக சமமாக தட்டி கொள்ளுங்கள். நடுவில் ஒரு ஓட்டை போடுக.

  3. 3

    மிதத்திர்க்கும் ஒரு படி அதிகமான (medium high flame) நெருப்பின் மேல் ஒரு வாணலியில் பொறிக்க தேவையான எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.. தட்டிய வடைகளை மெல்ல எடுத்து சூடான எண்ணையில் பொறிக்க. 2 பக்கமும் பிரவுன் ஆக வேண்டும். நன்றாக வெந்துவிட்டால் எண்ணையில் குமிழ்கள் இருக்காது. பொறித்த வடைகளை பேப்பர்டவல் மேல் போடுக

    மொரு மொரு வடை சுவைக்க தயார். விரும்பினால் சட்னி உடன் சுவைக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (7)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Super.here it's famous prasatham for Anjaneya Swamy.in Namakkal

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes