தேவையான பொருட்கள்

  1. பாஸ்மதி அரிசி – அரை கப்
  2. தக்காளி – இரண்டு
  3. பூண்டு -2
  4. பச்சை மிளகாய் – 2
  5. ஏலக்காய், கிராம்பு, வெங்காயம், – ஒன்று
  6. கறிவேப்பிலை – தேவையான அளவு
  7. மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
  8. கொத்தமல்லி – தேவையான அளவு
  9. உப்பு – தேவையான அளவு
  10. நல்லெண்ணெய் – தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பொதுவாகவே சாதம் செய்யும் முறை படி நன்றாக கழுவிய அரிசியை வடித்து சாதம் செய்து கொள்ளவும். பின்பு தக்காளியை அரைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    இப்போது பச்சை மிளகாயை அரைத்துக் கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சீரகம், ஆகியவற்றை தாளித்து பின் நாம் வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின் தேவையான அளவு வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவேண்டும் இறுதியாக தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.

  4. 4

    மஞ்சள்தூளையும் உப்பையும் தேவையான அளவு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி சாதம் சேர்த்து கிளறவேண்டும்.

  5. 5

    அடுப்பை நிறுத்தும் முன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி பரிமாறலாம்.
    இப்போது சுவையான தக்காளி சாதம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Leena Preethi
Leena Preethi @cook_25058148
அன்று

Similar Recipes