வாழைப் பூ கூட்டு

Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303

#mom
வாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

வாழைப் பூ கூட்டு

#mom
வாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4,5 பரிமாறுவது
  1. வாழைப்பூ 1
  2. பாசிப்பருப்பு 150 கிராம்
  3. தக்காளி 1
  4. பச்சைமிளகாய் 1, காய்ந்த மிளகாய் 4
  5. சின்ன வெங்காயம் 10
  6. பூண்டு 10 பல்
  7. உப்பு தேவையான அளவு
  8. தண்ணீர் தேவையான அளவு
  9. கறிவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு
  10. சாம்பார் மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  11. கடுகு, சீரகம் 1 டீஸ்பூன்
  12. எண்ணெய் 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பு வேகவைத்த கொள்ளவும்.

  2. 2

    ஒரு வானலியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி கடுகு,சீரகம், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் வாழைப்பூ, கறிவேப்பிலை சிறிது அளவு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    வேகவைத்த பருப்புடன் வதக்கிய வாழைப்பூவை சேர்த்து சாம்பார் மிளகாய் தூள் 2 டீஸ்பூன் உப்பு தேவையான அளவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கூக்கரில் ஒரு விசில் விடவும்.

  4. 4

    விசில் விட்ட பிறகு கூக்கரை திறந்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விடவும்

  5. 5

    பிறகு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.சுவையான வாழைப்பூ கூட்டு ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Gayathri Vijay Anand
Gayathri Vijay Anand @cook_24996303
அன்று

Similar Recipes