பத்திய பருப்பு உருண்டை குழம்பு

Lakshmi
Lakshmi @cook_25014066

#mom
பருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது.

பத்திய பருப்பு உருண்டை குழம்பு

#mom
பருப்புகளில் புரதச்சத்து கீரையில் இரும்புசத்து நிறைந்து இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்க்கும் ஏற்ற வகையில் சத்தானது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 100 கிராம் துவரம்பருப்பு
  2. 100 கிராம் கடலைபருப்பு
  3. 20 சின்ன வெங்காயம்
  4. 15 பற்கள்பூண்டு
  5. 2 தக்காளி
  6. அரைக்க;
  7. 10 சிவப்புமிளகாய்
  8. 2ஸ்பூன் சோம்பு
  9. 1ஸ்பூன் சீரகம்
  10. 1/2 இஞ்ச்பட்டை
  11. 4 கிராம்பு
  12. 1 இஞ்ச் இஞ்சி
  13. 4சில்லு தேங்காய்
  14. தாளிக்க
  15. சிறிதுபட்டைபூ
  16. 1ஸ்பூன் கடுகு
  17. 1ஸ்பூன் சீரகம்
  18. 1ஸ்பூன் சோம்பு
  19. 1/2ஸ்பூன் வெந்தயம்
  20. உப்பு தேவைக்கேற்ப
  21. 3ஸ்பூன் மிளகாய்தூள்
  22. 3ஸ்பூன் மல்லிதூள்
  23. 1ஸ்பூன் மிளகுதூள்
  24. 2ஆர்க்கு கறிவேப்பிலை
  25. சிறிதுகொத்தமல்லி
  26. 6ஆர்க்கு முருங்கைகீரை
  27. எலுமிச்சை அளவுபுளி
  28. 5 ஸ்பூன் நல்ல எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பருப்புகளை கழுவி சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊற வைத்த கொள்ளவும். பிறகு அதை தண்ணீர் வடித்து விட்டு வைக்கவும். புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்னர் வெங்காயம் தக்காளி பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். பிறகு தேங்காய் தவிர மற்ற அரைக்க கொடுத்துள்ள பொருட்களையும் கரகரப்பாக அரைத்து பருப்புகளை சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    அரைத்த மாவை ஒருபாத்திரத்தில் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம் பாதி சேர்த்து அதில் நறுக்கிய பூண்டு 2 சில்லு தேங்காயை பொடியாக நறுக்கி போட்டு முருங்கைகீரை கொத்தமல்லி சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

  4. 4

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்துக் சிவந்ததும் மீதமுள்ள வெகாயம் தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து வதக்கவும் அதில் தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.

  5. 5

    பிறகு புளிகரைசலை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். அதில் உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு உருண்டைகள் வெந்ததும் அதில்

  6. 6

    தேங்காயை அரைத்து ஊற்றி குழம்பு கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi
Lakshmi @cook_25014066
அன்று

Similar Recipes