முருங்கை காய் கிரேவி (Murunkai kaai gravy recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

#mom குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது.முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4பேர்
  1. 4முருங்கைக்காய்
  2. 1தக்காளி
  3. 100கிராம்வெங்காயம்
  4. 2குழம்பு மிளகாய் தூள்
  5. தேங்காய் சிறிதளவு
  6. இஞ்சி பூண்டு
  7. தாளிக்க சோம்பு கடுகு சிறிய பட்டை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டைகடுகு ஆகியவற்றை தாளித்து வெங்காயம் தக்காளி இவற்றை நன்றாக வதக்கவும்

  2. 2

    இப்போது சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக்காயை சேர்த்து அதனுடன் கிளறவும் குழம்பு மிளகாய் தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி இவற்றை வேக விடவும்.

  3. 3

    தேங்காய் இஞ்சி பூண்டு ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும்

  4. 4

    அரைத்த கலவையை கடாயில் ஊற்றி முருங்கைக் காயுடன் சேர்த்து கொதிக்கவிடவும்

  5. 5

    தண்ணீர் அனைத்தும் வற்றும் படி நன்கு கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைக்கவும் முருங்கைகாய் கிரேவி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes