வெண்ணிலா டிராப் பிஸ்கட்(Vanilla Drop biscuits recipe in tamil)

Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497

வெண்ணிலா டிராப் பிஸ்கட்(Vanilla Drop biscuits recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
  1. ஒரு கப்மைதா மாவு
  2. அரை கப்சர்க்கரை
  3. 2 டேபிள் ஸ்பூன்வெண்ணிலா எசன்ஸ்
  4. ஒன்றுமுட்டை
  5. ஒரு ஸ்பூன்பேக்கிங் பவுடர்
  6. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் சர்க்கரையை பொடி செய்து கொள்ளவும், மிக்சிங் பௌலில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சர்க்கரையை நன்றாக கலக்கிக் கொள்ளவும்.

  2. 2

    அதில் முட்டையை ஊற்றி மீண்டும் கலக்கவும்.

  3. 3

    இதனுடன் மைதா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

  4. 4

    இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

  5. 5

    உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை இதனுடன் கலந்து கொள்ளவும்.

  6. 6

    ஒரு பாலிதீன் கவரில் மாவை ஊற்றி இறுக்கமாக ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளவும்.

  7. 7

    கவரின் அடியில் சிறிது ஓட்டை போட்டு நெய் தடவிய தட்டில் டிராப் ஆக ஊற்றி கொள்ளவும்.

  8. 8

    ஒரு கடாயை மூடி போட்டு அடுப்பில் 15 நிமிடம் வைக்கவும். பின் தட்டை அதில் வைத்து 25 நிமிடம் பேக் செய்யவும்.

  9. 9

    டேஸ்டான டிராப் பிஸ்கெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanga Yogesh
Priyanga Yogesh @cook_25015497
அன்று

Similar Recipes