எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 :30 மணி நேரம்
5 முதல் 6 நபர்
  1. 4முட்டை
  2. 200 கிராம்சர்க்கரை
  3. 1 தேக்கரண்டிவென்னிலா எஸன்ஸ்
  4. 118 மிலி (1/2 கப்)எண்ணெய்
  5. 2மேசைக்கரண்டிரோஸ் மில்க் சிரப்
  6. 2முதல் 3 துளிகள்ரோஸ் ஃபுட் கலர்
  7. 180 கிராம்மைதா
  8. 1/4 தேக்கரண்டிஉப்பு
  9. 1 தேக்கரண்டிபேகிங் பவுடர்
  10. 1/4 கப் (60 மிலி)பால்
  11. 178 மிலி (3/4 கப்)மில்க் மெயிட்
  12. 1/2 கப்ஃப்ரெஷ் க்ரீம்
  13. 1 கப் (250மிலி)பால்
  14. ரோஜா இதழ்கள் - சிறிது
  15. நறுக்கிய பிஸ்தா - சிறிது
  16. 1 கப்விப்ட் க்ரீம்
  17. 1 தேக்கரண்டிரோஸ் வாடர்

சமையல் குறிப்புகள்

1 :30 மணி நேரம்
  1. 1

    மைதா, உப்பு, பேகிங் பவுடர் இவை மூன்றையும் சலித்து, கலந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டை சேர்த்து ஒரு நிமிடம் பீட்டரால் கலக்கவும்.

  3. 3

    அதனுடன் சர்க்கரை மற்றும் வென்னிலா சேர்த்து நன்கு கலக்கவும்.

  4. 4

    அதனுடன் ரோஸ் சிரப் சேர்த்து கலந்து, பிறகு ரோஸ் ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  5. 5

    பின்பு எண்ணெய் மற்றும் ரோஸ் வாடர் சேர்த்து நன்கு கலக்கவும்.

  6. 6

    சலித்த மாவு கலவையை மூன்று பிரிவாக சேர்த்து மிருதுவாக கலக்கவும்்

  7. 7

    தயார் செய்த கேக் கலவையை 12 * 8 * 3 வடிவ பாத்திரத்திற்கு மாற்றி, ஒரு குச்சியால் கலவையை கலந்து, லேசாக மேஜை மேல் தட்டவும்.

  8. 8

    180• டிகிரியில் 15 நிமிடங்கள் முற்சூடு செய்த அவனில், 40 முதல் 45 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.

  9. 9

    7 நிமிடங்கள் ஆற விட்டு, ஒரு குச்சியை வைத்து கேக் முழுவதும் துளைகள் இட்டு வைக்கவும்.

  10. 10

    பிறகு ஒரு பாத்திரத்தில் பால், க்ரீம், மில்க் மெயிட்,

  11. 11

    மற்றும் மீதமுள்ள ரோஸ் சிரப் சேர்த்து நன்றாக கலக்கவும்.

  12. 12

    கலக்கிய கலவையை கேக் மீது பரவலாக ஊற்றவும். சிறிது பாலை பறிமாரும் பொழுது மேலே ஊற்ற வைத்துக்கொள்ளவும்.

  13. 13

    இதற்கு மேல் விப்ட் க்ரீம் கொண்டு அலங்கரிக்கவும்.

  14. 14

    அலங்கரித்த கேக் மேல் ரோஜா இதழ்கள் மற்றும் நறுக்கிய பிஸ்தா கொண்டு அலங்கரிக்கவும்.

  15. 15

    தயார் செய்த கேக்கை 2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

  16. 16

    2 மணி நேரம் கழித்து துண்டுகள் போடவும்.

  17. 17

    பரிமாறும் முன்பு கேக்கின் மேலே பால் கலவையை சிறிது ஊற்றி பரிமாறவும்.

  18. 18

    வாயில் வைத்தவுடன் கரையும் இந்த அசத்தலான கேக்கை நீங்களும் செய்து உங்களை சுற்றி இருப்பவர்களை அசத்துங்கள்.... 🤩

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183
அன்று

Similar Recipes