ஆட்டுகல் தேங்காய் துவையல் (Thenkaai thuvaiyal recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#india 2020
இன்று எல்லா வேலைகளும் இயந்திரம் சார்ந்த வேலைகள் ஆகிவிட்டது.உலகமே இயந்திர மயமகிவிட்டது. எந்த வேலை செய்யவும் இயந்திரம். எதற்கு எடுத்தாலும் இயந்திரம்.ரோபோ உலகம் என்றும் சொல்லலாம்.உடல் உழைப்பே இல்லை . அம்மிகல் ஆட்டுகல் உபயோகம் இல்லை.அதற்கு பதில் மிக்ஸி கிரைண்டர் அல்ட்ரா கிரைண்டர் இன்னும் எவ்வளவோ மின்னனு சாதனங்கள் உபயோகத்தில் வந்துவிட்டது.மிக்ஸியில் அரைக்கும் அதே துவயலை அதே பொருட்கள் கொண்டு அம்மியில் ஆட்டுகல்லில் கையால் அரைத்து செய்து பாருங்கள்.முற்றிலும் சுவை வேறு பட்டு சாப்பிட அலாதியாக இருக்கும்.மேலும் மெஷினில் வீட்டு வேலைகளை முடித்து விட்டு அதுவும் கூட அரக்க பரக்க அவசரமாக முடித்துவிட்டு காசு கொடுத்து மெஷினில் உடற்பயிற்சி செய்ய பயிற்சி கூடம் செல்ல தேவையே இல்லை.இன்றும் என் வீட்டில் அம்மிகல், ஆட்டுகல் உபயோகத்தில் உள்ளது.இன்று நான் ஆட்டு கல்லில் அரைத்த தேங்காய் சட்னி கொடுத்துள்ளேன்.இரண்டு நாட்கள் வைத்தாலும் கெடாது.மேலும் சுவையும் அருமையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  1. 1/2 மூடி துருவிய தேங்காய்
  2. 2 ஸ்பூன் கடலை பருப்பு
  3. 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  4. 8 வர மிளகாய்
  5. புளி பெருநெல்லி காய் அளவு
  6. 1 ஸ்பூன் எண்ணெய்
  7. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அரை மூடி தேங்காயை துருவிக்கொள்ளவும். வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடு ஏறியவுடன் அதில் இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து சிவக்க வறுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் அளவு புளி சிறுது நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஆட்டுக் கல்லை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளவும்.ஆட்டுக்கல்லில் தேங்காய் துருவல், புளி, மற்றும் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தேவையான தண்ணீர் தெளித்து கையில் ஒட்டிக் கொள்ளவும். தங்கள் தேவைக்கு ஏற்ப கரகரப்பாகவும் நன்கு மசிய அரைத்துக் கொள்ளவும். தேவை என்றால் ஆட்டுக் கல்லில் இருந்து சட்னி வழிக்கும் முன்பு கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து இரண்டு சுற்று ஆட்டிக் கொள்ளவும். ஆட்டுக்கல்லில்இருந்து துவையலை சுத்தமாக மேலே வழித்து எடுத்து பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.

  3. 3

    வழித்து எடுத்துக்கொண்ட பிறகு ஆட்டுக்கல்லில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கழுவி அந்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இட்லி அல்லது தோசைக்கு சட்னியை கரைத்துக் கொள்ள உதவும். மீதி கெட்டியான சட்னியை மதியம் சாப்பாட்டிற்கு வைத்துக்கொள்ளலாம். தண்ணீர் தெளிக்காமல் ஆட்டினாள் இரண்டு நாட்கள் ஆனாலும் சட்னி கெடாது.

  4. 4

    இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள தாளித்துக் கொள்ளவும். சாப்பாட்டிற்கு கெட்டியாக அப்படியே வைத்துக்கொண்டால் பிசைந்து இது சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

கமெண்ட் (2)

Similar Recipes