தேங்காய் ரவை கேக் (Thenkaai ravai cake recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சத்தான சுவையான கேக். நான் சக்கரை அதிகமாக சேர்க்கவில்லை. விருப்பமானால் நீங்கள் சர்க்கரை கூட சேர்க்கலாம், சுவைத்துப் பார்த்தோம். ஸ்ரீதர் ¼ கேக் சாப்பிட்டு “ரொம்ப நன்றாக இருக்கு” என்று சொன்னதால் இது கட்டாயம் சுவையாக இருக்கும். காம்பளிமெண்ட்ஸ் கொடுப்பதில் ஸ்ரீதர் ஒரு கஞ்சன். #bake

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
8 பரிமாறுவது
  1. சிரப் செய்ய:
  2. 1 கப் சக்கரை
  3. 1 மேஜை கரண்டி எலுமிச்சை பழச் சாரு
  4. ¼ தேக்கரண்டி குங்குமப்பூ
  5. கேக் செய்ய:
  6. 1 மேஜை கரண்டி வெண்ணை
  7. 1 ½ கப் சூடான பால்
  8. ¼தேக்கரண்டி குங்குமப்பூ
  9. ½ கப் தயிர்
  10. 1 கப் தேங்காய் மாவு
  11. 1 கப் ரவா
  12. 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  13. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  14. சிட்டிகை உப்பு
  15. ¼ கப் சக்கரை
  16. ¼ கப் சன்ஃபிளவர் ஆயில்
  17. ¼ கப் தேங்காய் ஃப்லெக் (FLAKES)
  18. பிரிவு கேக்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை சேகரிக்க, சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க

  2. 2

    பேகிங் அடுப்பை பிரி ஹீட் (pre heat) 375F (190C) செய்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸாஸ்பேனில் சக்கரை எலுமிச்சை பழ சாரு, குங்குமப்பூ கூட ¼ கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க. நெருப்பை குறைத்து கிளறுக சக்கரை கறையும் வரை. அடுப்பை அணைக்க. கேக் செய்ய:
    சூடான பாலில் குங்குமப்பூ 5 நிமிடங்கள் ஊறவைக்க. பின் கூட தயிர் சேர்த்து கலக்கி மிக்ஸ் செய்க

  3. 3

    ஒரு பெரிய கிண்ணத்தில் ரவை, தேங்காய் மாவு, பேகிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து விஸ்க் செய்க.

    வேறு ஒரு கிண்ணத்தில் சக்கரை எண்ணை சேர்த்து ஸ்பேட்டுலாவால்(spatula) அடித்து light and fluffy ஆக்குக;

    பால் தயிர் கலவை சேர்க்க. கிளறி ஒன்று சேர்க்க. ரவை தேங்காய் கலவை சேர்த்து போல்ட் (fold) செய்க

  4. 4

    பேகிங் பேன் மேல் வெண்ணை தடவுக. பார்ச்மேன்ட் பேப்பர் போடுக. விளிம்புக்கு வெளியே 2 அங்குலம் தொங்க வேண்டும். அப்பொழுதுதான் கேக் தயார் ஆன பின் பேப்பரைப் பிடித்து சுலபமாக வெளியே எடுக்க முடியும்.போல்ட் செய்த மாவு கலவையை பேகிங் பேன் உள்ளே ஊற்றுக. மாவை சமம் செய்க. மாவிற்கு வெளியே 1 அங்குலம் இடைவெளி வேண்டும். அப்பொழுதுதான் பேக் முடிந்த பின் சிரப் வெளியே வழியாமல் ஊற்ற முடியும். பிரீ ஹீட் செய்த பேகிங் அடுப்பில் வைக்க. பொன்னிறமாகும் வரை பேக் செய்க. விரலால் தொட்டால் நடுவு spring ஆகும். 1 மணி நேரம் ஆகலாம்

  5. 5

    என் அடுப்பு மின்சார அடுப்பு. பேக் செய்யும் நேரம் உங்கள் அடுப்பை பொறுத்தது.
    வெளியே எடுத்து சிரப் மேலே ஊற்றுக. தேங்காய் ஃப்லெக் (Flakes) தூவுக. தேங்காய் ஃபிளேக் (flake) தூவுக. ஆற வைக்க. நன்றாக ஆறின பின் பார்ச்மேன்ட் பேப்பரை தூக்கி வேறு ஒரு தட்டில் மாற்றுக. ஒரங்களை (edges) டிரீம் (trim) செய்க. கத்தியால் துண்டு போடுக. 8 துண்டுகள் போடலாம். சுவைக்க

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes