சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேருக்கு
  1. 1 கப் மைதா மாவு
  2. 3ஸ்பூன் சர்க்கரை
  3. ஒரு ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  4. அரை ஸ்பூன் பேக்கிங் சோடா
  5. இரண்டு ஸ்பூன் கோகோ பவுடர்
  6. ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  7. ஒரு கப் பால்
  8. ரெண்டு டேபிள்ஸ்பூன் உருக்கிய வெண்ணெய்
  9. சிறிதளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு பவுலில் மைதா மாவு பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா பொடித்த சர்க்கரை ஒரு பின்ச் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    இந்தக் கலவையுடன் இரண்டு ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து நன்று கலந்து கொள்ளவும்

  3. 3

    ஒரு கப் மிதமான சூட்டில் பாலில் இரண்டு ஸ்பூன் உருக்கிய வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்

  4. 4

    பிறகு பாலை சிறிது சிறிதாக மைதா கலவையில் ஊற்றி கலக்கவும்

  5. 5

    மைதா கலவையுடன் பால் நன்கு கலந்தவுடன் ஒரு ஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும் நன்கு கட்டியில்லாமல் மாவு ஊற்றும் பதத்திற்கு கரைக்கவும்

  6. 6

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கலந்த மாவை வெண்ணை தடவிய தோசை தவாவில் ஊற்றி ஒருபக்கம் வெந்தபிறகு மேலே சிறிய துவாரம் எழுந்து பிறகு திருப்பிப் போட்டு மறுபக்கம் நன்கு வேகவைத்து எடுக்கவும்

  7. 7

    அருமையான ருசியான குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாக்லேட் பேன் கேக் தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes