பூந்தி லட்டு (Boondi laddu)

பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன்.
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவை சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை சோடா உப்பு, தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.
- 2
சர்க்கரை, பாகு வைக்க மேலே கொடுத்துள்ள அளவு தண்ணீர் சேர்த்து கலந்து பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடு செய்து ட்ராப்பிங் கன்சிஸ்டென்சி வருமாறு சர்க்கரை பாகு வைத்து, ஏலக்காய் பொடி கலந்து வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணையை ஊற்றி சூடானதும், கரைத்து வைத்துள்ள கடலை மாவை பூந்தி கரண்டியில் ஊற்றி எண்ணையில் தேய்த்து, கொஞ்சம் வெந்ததும் ஒரு முறை கலந்து எடுத்து சர்க்கரைப்பாகில் சேர்த்து ஐந்து நிமிடங்கள் ஊற விட்டு நன்கு கலந்து எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் போடவும்.
- 4
பின் முந்திரி, திராட்சையை ஓரு ஸ்பூன் நெய்யில் வறுத்து, தயாராக உள்ள பாகில் கலந்து எடுத்துள்ள பூந்தியில் சேர்த்து, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து லட்டு பிடிக்கவும்.***லட்டு பிடிக்கும் போது பூந்தி மிதமான சூடாக இருக்க வேண்டும். நன்கு அழுத்தி உருட்டி லட்டு பிடிக்கவேண்டும்.
- 5
இப்போது சுவையான பூந்தி லட்டு சுவைக்கத்தயார். இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.
Similar Recipes
More Recipes









கமெண்ட் (19)