பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Halwa
முதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது.

பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)

#GA4
#Halwa
முதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

3 நிமிடங்கள்
30 பரிமாறுவது
  1. 2 கப் பழைய சாதம்
  2. 3 ஸ்பூன் கான்பிளவர் மாவு
  3. ஒரு கப் தேங்காய் பால்
  4. 3 கப் சர்க்கரை
  5. கேசரி பவுடர் தேவையான அளவு
  6. தண்ணீர் தேவையான அளவு
  7. இரண்டு ஸ்பூன் நெய்
  8. முந்திரி, பாதாம் பருப்பு சிறிதளவு

சமையல் குறிப்புகள்

3 நிமிடங்கள்
  1. 1

    2 கப் பழைய சாதத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு மையாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    3 ஸ்பூன் கான்பிளவர் மாவு சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு கப் தேங்காய் பால் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் சர்க்கரையை சேர்த்து அரை கப் தண்ணீர் விட்டு சர்க்கரையை கரைத்து கொள்ளவும். அரைத்து வைத்த சாதத்தை அத்துடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    இன்னொரு கடாயில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா கலர் பதத்திற்கு வருவதற்கு சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்துள்ளேன்

  6. 6

    அந்த சக்கரை கரைசலையும் சேர்த்து நன்றாக கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். மிதமான சூடு, அதிகமான சூடு என மாற்றி மாற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்

  7. 7

    2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரி பருப்பு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்

  8. 8

    ஒரு சிறிய பாத்திரத்தில் நெய் தடவி அழகிற்காக பாதாம் பருப்பு முந்திரிப் பருப்பு வைத்து அல்வாவை அந்த பாத்திரத்தில் ஊற்றி விட வேண்டும்

  9. 9

    நன்றாக ஆறியவுடன் வேறொரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

  10. 10

    மீதமான சாதத்தை வைத்து சுவையான அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes